- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் இணையத்தில் வெளியீடு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்!

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியீடு – விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் நேற்று முன்தினம் இரவு இணையத்தில் முழு படமும் வெளியானது. இது தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தங்களது எதிர்ப்பை கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராக குரல் எழுப்பி அரசு இதை செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது ஒரு விபத்து அல்ல. அது ஒரு அமைப்பு ரீதியான தோல்வியின் விளைவு. உரிய சட்ட நடைமுறைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்பட்டிருந்தால் நாம் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம்.

சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட அளவுக்கதிகமான தாமதங்கள், திருட்டுப் பிரதிகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கின. சட்டப்பூர்வமான அணுகல் தடைபடும்போது, ​​சட்டவிரோத வழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. திருட்டுப் பிரதி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது கலை மற்றும் கலைஞர் மீதே தொடுக்கப்படும் ஒரு தாக்குதல்.

- Advertisement -

அது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நாம் விரும்பும் சினிமாவைத் தாங்கி நிற்கும் நேர்மையான வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீடுகளையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. அமைப்பு தோல்வியடையும்போது படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்?

நமக்கு பொறுப்புக்கூறல், விரைவான சான்றிதழ் வழங்குதல், கடுமையான அமலாக்கம் மற்றும் நிகழ்நேர நீக்கங்கள் தேவை என்று அதில் தெரிவித்துள்ளார். இதேபோல் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் திரை அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்