தமிழ் சினிமாவில் இப்போது பிரபல நட்சத்திரங்கள், முன்னணி தலைவர்களின் படங்களை வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை மகாத்மா காந்தியடிகள், ஜெயலலிதா, பாரதியார், காமராஜர், கட்ட பொம்மன் பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
சமீபமாக இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது. இதில் நடிகர் தனுஷ் இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார். த டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவானது. இதில் வித்யாபாலன் நடித்திருக்கிறார். இந்த பிரபலங்களின் வரிசையில் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
கடந்த 48 ஆண்டு காலமாக, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தனித்துவமான நடிப்பாலும், விதவிதமான ஸ்டைலாலும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருகிறார். ரஜினி இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து 171-வது படமாக கூலி படத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் படத்தில் 600 கோடி வசூலில் சாதனை புரிந்தார்.
இப்போது ரஜினிகாந்த் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்போது கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரலானது. அதே நேரத்தில், பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் சஜித் நதியத் வாலா தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 83, சூப்பர் 30, கிக் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இதற்கு ரஜினிகாந்த் ஓகே சொல்லிவிட்டால் கதையை எழுதும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பே ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதியதாக கூறப்படுகிறது ஆனால் பாதியிலேயே நிறுத்திவிட்டார். ஒருமுறை வாழ்க்கை வரலாறு என்பதை உண்மையாக எழுத வேண்டும். நடந்த எல்லா உண்மைகளையும் எழுதும் தைரியம் எனக்கு இல்லை என்று ரஜினிகாந்த், ஒரு விழாவில், கே பாலசந்தர் கேள்வி கேட்ட போது கூறியிருந்தார். ஆனால் இப்போது ரஜினி வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால் அதை வைத்து பல நூறு கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற முடிவுக்கு ரஜினி வந்திருக்கலாம். ஏனெனில் இப்போதைக்கு கதையே இல்லாமல், கற்பனை வளர்ச்சியில் தவிக்கும் நிலையில், இப்படியும் ஒரு கல்லா கட்டலாமே என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்திருக்கலாம்.





