நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே சினிமாவில் ஆக்டிவ் ஆக இருப்பவர். அவர் தனது படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் தமிழ் சினிமாவில் என்ன புதிய படங்கள் வருகின்றன, யார் நடிக்கிறார்கள் வெற்றி பெறும் தோல்வியடையும் படங்கள் குறித்து எல்லாம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர். அவ்வப்போது மாஸ் ஹிட் ஆகும் பட இயக்குனரை, படக்குழுவினரை தனது போயஸ்கார்டன் வீட்டுக்கு ரஜினியே வரவழைத்து பாராட்டுவார்.
ரஜினிகாந்த் எப்போதுமே வணிக ரீதியான தனது படங்கள் நிச்சயமாக வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் உஷாராக இருப்பவர். அதனால் அவரது படம் நிச்சயமாக வெற்றி என்றால்தான் அவரால் அதை ஜீரணித்துக்கொள்ளவே முடியும். தோல்வி படங்களை ரஜினியால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் ஒரு படத்தில் நடிக்க துவங்கும் போதே பல விஷயங்களையும் கணித்து ஆராய்ந்த பிறகுதான் முடிவு செய்வார்.
ஆனாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில படங்கள் தோல்வியை தரும். அதற்கு காரணம், இயக்குனர் கதையை சொன்ன மாதிரியே படத்தை எடுத்திருக்க மாட்டார்கள். வாயில் கதை சொல்லும் போது பெரிய அளவில் உருட்டி விட்டு, திரையில் சொதப்பி விடுவார்கள். அதுபோல் ரஜினிக்கு மட்டுமின்றி கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா போன்ற பல நடிகர்களுக்கும் அப்படி நடந்திருக்கிறது.
சமீபத்தில்தான் அப்படி தான் மணிரத்னம் சொன்ன கதையை நம்பி கமல்ஹாசன் 300 கோடி ரூபாய் முதலீட்டை கொட்டி தக்லைஃப் படத்தை தயாரித்தார். படத்தை பார்த்தவர்கள் யாரும் அந்த படத்தை ரசிக்கவில்லை. மாறாக தக்லைஃப் படத்தை திட்டி வருகின்றனர். இதுக்கு இந்தியன் 2 படம் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பழுத்த அனுபவசாலி. இயக்குனர் மணிரத்னமும் 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இயக்குனராக இருப்பவர். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள். இருவருமே தமிழ் சினிமாவில் ஜாம்பவான்கள் என்றால் அது மிகையல்ல. ஆனால் அவர்கள் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் சொதப்பி விட்டது. மிக மோசமான நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் தான் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறார். மணிரத்னம் கமல் இணைந்த படமே இப்படி தோற்று போய்விட்டதே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான் நடித்த கூலி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா, படம் எல்லாவிதங்களிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா, அல்லது தக்லைஃப் போல கூலி படமும் பிளாப் ஆகி விடுமா என்ற பயங்கர குழப்பத்தில், பீதியில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





