- Advertisement -
பிறரை பற்றிஅவதூறு பேசுவது குறித்து ஒருமுறை நண்பரிடம் விளக்கம் அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது.ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் குறை கூறிப் பேசும்போது அந்தப் பேச்சு எப்படியாவது அந்த நபரின் காதுகளுக்குச் சென்றுவிடும். அதைக் கேட்கும்போது அவருடைய மனம் நிச்சயம் வேதனைப்படும். அந்த இடத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பது தெரியவ ந்தால் நம்மீதும் அவருக்கு வருத்தம் ஏற்படும். நாம் எதுவும் பேசாமல் இருந்திருந்தாலும், அந்தப் பேச்சில் நாமும் இருந்தோம் என்பதால் நம்மைப் பற்றியும் தவறாக நினைக்கக்கூடும். தேவையின்றி ஒருவருடைய மனதைப் புண்படுத்துவதையும், நம்மைப் பற்றிய தவறான எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படுவதையும் தவிர்க்கவே அப்படிப்பட்ட இடங்களில் இருந்து விலகிச் சென்று விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.





