- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் ரஜினியோட கேரக்டர் பெயர் என்ன தெரியுமா? அட இந்த பேர்ல விஜய் நடிச்ச...

கூலி படத்தில் ரஜினியோட கேரக்டர் பெயர் என்ன தெரியுமா? அட இந்த பேர்ல விஜய் நடிச்ச படம் கூட இருக்குதே? – ஆனா படத்துல தலைவர் மாஸ் காட்டுனா சரிதான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். சமீபத்தில் அந்த படத்துக்கான ரஜினிகாந்த் டப்பிங் பேசிய காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த படத்தை தொடர்ந்து தனது 171வது படமாக கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார்.

ஏற்கனவே மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற பெரிய மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் லியோ படத்தை சொதப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனால் கூலி படத்தை வேற லெவலில் தர வேண்டும் என்பதற்காக அதிகளவில் மெனக்கெட்டு பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார்.

- Advertisement -

கூலி படத்தில் இதுவரை சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, ரச்சிதா ராம், சவுபின் சாகர், அமீர்கான் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி விட்டது. இந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரின் பெயருடன் அந்த போஸ்டர்களை 2 தினங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பின் கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். கமல் மகள் ஸ்ருதிஹாசன் இப்போது ரஜினிக்கு மகளாக நடிக்கிறார். அதுதவிர முக்கிய நடிகர்கள் நடிக்கிற நிலையில் யார் யாருக்கு எந்த மாதிரியான கேரக்டர், இதில் ரஜினிக்கு ஆதரவாகவும், ரஜினிக்கு எதிராகவும் நடிக்கப் போவது யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று மாலை வெளியான அறிவிப்பில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவா என்ற பெயர் கேட்பதற்கும், உச்சரிப்பதற்கும் மிகவும் கம்பீரமான ஒரு பெயராக, மாஸ் ஆக இருக்கிறது என்பதால், இந்த கேரக்டரில் ரஜினி மாஸ் தெறிக்க விடுவார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் தேவா என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். அதில் அவரது பெயரும் தேவா தான். அதே போல் சூர்யா நடித்த அயன் படத்திலும் அவரது கேரக்டர் பெயர் தேவா தான். கூலி படமும் ஏற்கனவே வந்தது. ரஜினியின் பெயரும் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமானதுதான். இப்படி எல்லா விஷயங்களுமே பழசாக இருக்கிறதே, படத்தின் கதை, திரைக்கதை புதுசாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்