- Advertisement -
Homeபொழுதுபோக்குஉத்தரப்பிரதேச முதலமைச்சரின் காலில் விழுந்த தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்... தலைவர் ரசிகர்களின் ரியாக்சன் என்ன?...

உத்தரப்பிரதேச முதலமைச்சரின் காலில் விழுந்த தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்… தலைவர் ரசிகர்களின் ரியாக்சன் என்ன?…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படம் மூலம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதே போல், பீஸ்ட் திரைப்படத்தால் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட நெல்சனும் தற்போது மீண்டு வந்துள்ளார். அனிருத் திசையில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்க, மலையாள பிரபலம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஜராப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வந்தனர். இதில் சிவராஜ்குமார் மற்றும் மோகன் லாலுக்கு கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத வகையில் அசத்தலான காட்சியை வைத்திருந்தார் நெல்சன்.

இது மட்டும் அல்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிக்கு உண்டான மாஸ் அண்ட் கிளாஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால், படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வர ஆரம்பித்தனர். பாட்ஷா, படையப்பா படத்தில் பார்த்த ரஜினியை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காண முடிந்ததாக தலைவர் ரசிகர்கள் சிலாகித்தனர்.

இதன் காரணமாக இந்த வார இறுதியிலும், ஜெயிலருக்கான கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு பெரிய வசூலுக்கு, தமிழ்நாடு ரசிகர்கள் மட்டும் காரணமின்றி, ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களிலும் மக்கள் திரையரங்குகளில் கூடுவதால் லாபம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனிடையே ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை கோயில்களில் தரிசனம் செய்தார். படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள ரஜினிகாந்த், வடமாநிலங்களில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்ற அவர், அங்குள்ள ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இதன்பிறகு உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னையும் அவர் சந்தித்து உரையாடினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக கூறினார்.

ஆனால், யோகி ஆதித்யநாத்திற்கு சில வேலைகள் இருந்ததால், அம்மாநில துணை முதலமைச்சர் மவுரியா ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தார். அவருடன் ரஜினியின் மனைவி லதாவும் இருந்தார். படத்தின் நடுவிலேயே அலுவல் வேலை இருந்ததால் துணை முதலமைச்சர் கிளம்பினார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற ரஜினி, அவர் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் இந்த செய்கையை சிலர் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்