- Advertisement -
Homeபொழுதுபோக்குலட்ச ரூபாய்க்கு பதில் கோடி ரூபாய் சம்பளம், அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன், தரமான சம்பவத்தை செய்த...

லட்ச ரூபாய்க்கு பதில் கோடி ரூபாய் சம்பளம், அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன், தரமான சம்பவத்தை செய்த ரஜினிகாந்த்

- Advertisement -

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்றே ஒரு பல்கலைக்கழகமாக விளங்கியவர் என்பதை பலரும் அறிவார்கள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த  கதாபாத்திரத்தின் தன்மையை தனது அசத்தலான நடிப்பால் வேற லெவலுக்கு கொண்டு செல்பவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை முன்னோடியாக கொண்டு பல நடிகர்கள் சினிமாவில் வலம் வந்தார்கள். இவ்வாறு ஒரு மிகப்பெரும் புகழை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன்.

இந்த நிலையில் “படையப்பா” திரைப்படத்தின்போது ரஜினிகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “படையப்பா” திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு தந்தையாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் சிவாஜி கணேசன் மிகவும் அசத்தலாக நடித்திருந்தார். குறிப்பாக அவர் இறக்கும் தருவாயில் ஓடிச்சென்று தான் வாழ்ந்த வீட்டை கட்டிப்பிடிக்கும் காட்சி, பார்வையாளர்கள் பலரையும் அழ வைத்தது.

இந்த நிலையில் ‘படையப்பா” திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டிருந்ததாம். ஆனால் அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து முடித்துக்கொடுத்த பிறகு, ரஜினிகாந்த் அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்தாராம். அந்த காசோலையை பார்த்த சிவாஜி கணேசன் அதிர்ந்துபோனாராம். “10 லட்சத்திற்கு பதில் கோடி ரூபாய்க்கான காசோலையை கொடுத்திருக்கிறார்களே, ஒரு வேளை தவறுதலாக கொடுத்துவிட்டார்களோ?” என்று எண்ணிய சிவாஜி கணேசன் அந்த காசோலையை திரும்ப கொடுத்துவிடலாம் என்று கூறினாராம்.

ஆனால் அதன் பிறகுதான் உண்மை தெரிய வந்ததாம். அதாவது ரஜினிகாந்தே சிவாஜி கணேசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்திருக்கிறார். சிவாஜி கணேசனின் திறமைக்கு அந்த சம்பளம் மிகவும் கம்மிதான் என்றாலும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் தரவேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பினாராம். “படையப்பா” திரைப்படத்திற்கு ரஜினிகாந்த்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்