- Advertisement -
Homeபொழுதுபோக்குகரெக்ட்டா இருந்துக்க- விஜய்யை பகிரங்கமாக எச்சரிக்கும் ரஜினிகாந்த், இப்படி எல்லாம் டீகோட் பண்றாங்களே

கரெக்ட்டா இருந்துக்க- விஜய்யை பகிரங்கமாக எச்சரிக்கும் ரஜினிகாந்த், இப்படி எல்லாம் டீகோட் பண்றாங்களே

- Advertisement -

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் அடிபட்டு வந்தாலும் மறு பக்கம் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி கூறினாலாவது பரவாயில்லை, விஜய்தான் இப்போதும் சூப்பர் ஸ்டார் என்று கூறுகின்றனர். இது ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று “ஜெயிலர்” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “Hukum” பாடல் வெளியானது. இந்த பாடலின் தொடக்கத்தில், “இங்க நான்தான் கிங், நான் வச்சதுதான் ரூல்ஸ், அந்த ரூல்ஸை நான் அப்பப்போ மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்ன்னு கேட்டு ஃபாலோவ் பண்ணனும். அதை விட்டுட்டு எதுவும் அடாவடித்தனம் பண்ணனும்ன்னு நினைச்ச உன்னை கண்டந்துண்டமா வெட்டி கலைச்சு போட்டிடுவேன்” என்று ரஜினிகாந்த் பேசுவது போல் ஒரு வசனம் வருகிறது.

- Advertisement -

இந்த வரிகளை குறித்து சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசிய பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், “ரஜினி என்ன சொல்கிறார் என்றால், அரசியலுக்கு வருவேன்னு சொல்லுவேன், திடீர்ன்னு வரலைன்னு சொல்லுவேன், நான் ஆன்மீகவாதின்னு சொல்லுவேன், இதெல்லாம் கேட்டுட்டு இருந்தா என் ரசிகனா இருன்னு எச்சரிக்கிறார்” என கூறியுள்ளார்.

அதே போல் Hukum பாடலில், “பேரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இது மறைமுகமாக விஜய்யை தாக்குவது போல் எழுதப்பட்ட வரிகள் என்று பலரும் கூறி வருகின்றனர். அதாவது விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருவதால் அவர்களை நேரடியாக தாக்குவது போல் இந்த வரிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்