- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் தெரியுமா... இது மட்டும் நடந்தால்...

கூலி திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் தெரியுமா… இது மட்டும் நடந்தால் ரஜினி ரசிகர்களை கையில் பிடிக்க முடியாதே…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.

 

- Advertisement -

நிச்சயம் இதில் போதைப்பொருள் விஷயங்கள் இருக்காது என்று லோகேஷ் கனகராஜ் உறுதியாக கூறிவிட்டார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வரும் சூழலில், இதற்காக பிரம்மாண்ட செட் விசாகப்பட்டினத்தில் போடப்பட்டது.

 

- Advertisement -

படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார். மலையாள நடிகர் சோபின் சபீர், கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்திற்கு தேவா என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

 

படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் இதன் சூட்டிங் நடைபெற்று வந்த சூழலில், அடுத்ததாக சென்னையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

 

விஜய்யை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கிய, வெங்கட் பிரபு தான் ரஜினியுடன் இணைய போவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இதனை லைக்கா நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அந்த நிறுவனமே, அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் ரஜினி வெங்கட் பிரபு இணைய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ரஜினியை சந்தித்து வெங்கட் பிரபு கதை கூறியதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்