மாடலிங் துறையில் பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ராய், 1997 ஆம் ஆண்டு தமிழில் மணிரத்னம் இயக்கிய “இருவர்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஐஸ்வர்யா ராய் தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் “இருவர்” திரைப்படத்தை தொடர்ந்து “ஜீன்ஸ்’, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “ராவணன்”, “எந்திரன்”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவ்வாறு இந்திய ரசிகர்களின் மனதில் பேரழகியாக குடிபுகுந்த ஐஸ்வர்யா ராய், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் மிகப் பெரிய நடிகையாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நடிகர் சல்மான் கானும் அவரும் காதலித்து வந்ததாக பல செய்திகள் உண்டு. ஆனால் அவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆன நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது அபிஷேக் பச்சனின் குடும்பத்தினர் ஐஸ்வர்யா ராயை மருமகளாக ஏற்றுக்கொள்ளாததை பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராயை முதலில் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஐஸ்வர்யா ராயின் கடந்த காலங்களை மனதில் வைத்துத்தான் ஜெயா அவ்வாறு நடந்துகொண்டார் என கூறப்படுகிறது.

அதே போல் ஒரு நடிகையை திருமணம் செய்தால் தனது மகனின் வாழ்க்கை சீரழிந்துவிடும் எனவும் ஜெயா நினைத்தாராம். அதன் பின் ஒரு வழியாக ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சனிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாராம். ஜெயா 70களில் பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





