- Advertisement -
Homeபொழுதுபோக்குஏல... தலைவரு நிரந்தரம்ல... திருநெல்வேலியில் புழுதி பறக்க தொடங்கிய ரஜினிகாந்த் பட சூட்டிங்... எந்த காட்சிகளாம்...

ஏல… தலைவரு நிரந்தரம்ல… திருநெல்வேலியில் புழுதி பறக்க தொடங்கிய ரஜினிகாந்த் பட சூட்டிங்… எந்த காட்சிகளாம் எடுக்குறாங்க தெரியுமா?…

- Advertisement -

தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்வியால் துவண்டு இருந்த நடிகர் ரஜினிக்கு, ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் உற்சாகமடைந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் அவர் நடித்து முடித்தார். இதில் சிறப்பு தோற்றத்தில் வரும் ரஜினிக்கு மொய்தின் கான் என்னும் கதாபாத்திரமாம். கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு எடுக்கும் இந்த படத்தில் நாயகர்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படம் வரும் பொங்கலன்று வெளியாகிறது. லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது கைவசம் வைத்துள்ளார். இதில் முதல் திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்குகிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இரண்டாவது படத்தை மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் எடுக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் பிஸியாக இருக்கிறார். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்விகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாலிவுட் திரை உலகின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனும் இதில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து காரில் வந்த ரஜினியை பலரும் உற்சாகமாக வரவேற்றனர். அங்குள்ள தரை ஓடு தொழிற்சாலையில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். இதில் முக்கிய காட்சிகளை எடுக்கப்பட இருக்கிறதாம். இதைத்தொடர்ந்து நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரியில் ரஜினி படம் எடுக்கப்படுகிறது. இதற்காக குமரி வட்டார வழக்கு மொழியை ரஜினி பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்