- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த பிரபல நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தாரா ரஜினிகாந்த்? அடடா, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

இந்த பிரபல நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தாரா ரஜினிகாந்த்? அடடா, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே

- Advertisement -

1970களில் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்த், 1980களிலேயே மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்து உடைய நடிகராக வளர்ந்தார். அதே போல் அக்காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 1980களில் தென்னிந்திய சினிமாவில் கலக்கு கலக்கிய ஒரு நடிகையுடன் ரஜினிக்கு தொடர்பு இருந்ததாக ஒரு பிரபல சினிமா ஆர்வலர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் பல திரைப்படங்களில் ரஜினியுடன் இணைந்து பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். காந்த கண்களால் பல ஆண்களை மயக்கிப் போட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் பல ஆண்கள் வந்துபோனார்கள். அதில் ரஜினிகாந்தும் ஒருவர் என்று பிரபல யூட்யூபரான வித்தகன் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான தி டர்டி பிக்சர் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ரோலில் நடித்திருந்த வித்யா பாலன், ஒரு உச்ச நடிகருடன் தொடர்பு இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்திற்கு சூர்யகாந்த் என்று பெயர் வைத்திருப்பார்கள். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இவர்களுக்குள் இருந்த தொடர்பு தெரிந்திருக்கிறது” எனவும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

80களில் உச்ச நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, ஒரு டாக்டரை காதலித்ததாக கூறுவார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென சில்க் ஸ்மிதா சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சில்க் ஸ்மிதாவின் தற்கொலை செய்தி தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று வரை சில்க் ஸ்மிதாவின் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் மர்மமாகவே இருக்கிறது.

சற்று முன்