நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வெற்றி கொடிநாட்டி வருகிறார். இப்போது 73 வயதிலும் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 500 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது.
இதையடுத்து தற்போது டைரக்டர் தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தின் ஷூட்டிங் வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் துவங்குகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகள் ஆசைப்படுகின்றனர். பிற மொழி நடிகைகளும் விரும்புகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் இந்த நடிகையுடன் தான் நான் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு நடிகையும் இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்தை தான் தருகிறது. அதுவும் தொடர்ந்து 4 படங்களில் போராடி, 5வது படத்தில் அவரை தனது ஜோடியாக்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.
படையப்பா படத்தில் கதாநாயகியாக, அவரை நடிக்க வைக்க ரஜினிகாந்த் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்த கேரக்டருக்கு படத்தில் சரியான முக்கியத்துவம் இல்லை என, அந்த வாய்ப்பை அந்த நடிகை வேண்டாம் என நிராகரித்து விட்டார். அதன் பிறகு பாபா படத்தில் நடிக்க அவரை, ரஜினி அழைத்தார். ஆனால் அந்தப் படத்தில் பணத்துக்காக காதலை மறுக்கும் அந்த கேரக்டரில் நான் நடித்தால் என் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் எனவும் அவர் நிராகரித்து விட்டார்.
அடுத்து 3வது முறையாக, சந்திரமுகி படத்தில் அந்த நடிகையை நடிக்க அழைத்தபோது, அந்தப் படத்தில் தன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை எனக் கூறி மறுத்துவிட்டார். அதன்பிறகு சிவாஜி படத்தில் நடிக்க அழைத்த போது, நான் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதால் இந்த படத்தில் நடிக்க தேதியில்லை என்று ரஜினிக்கு நோ சொல்லிவிட்டார்.
இப்படி தொடர்ந்து நான்கு படங்களில் ரஜினியுடன் ஜோடி சேர அந்த நடிகை மறுத்த நிலையில் இறுதியாக எந்திரன் படத்தில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டார். அவர் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்தான். அதற்கு காரணம் அந்த படத்தை டைரக்ட் செய்தது ஷங்கர் என்பதால் தான். ஏனெனில் ஏற்கனவே ஜீன்ஸ் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு ஏமாந்து போன ரஜினிகாந்த் ஆசை, கடைசியில் எந்திரன் படம் மூலம் அவரது ஆசை நிறைவேறியது.





