- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிவாஜிக்கு நடந்த விழாவில் அன்றைய முதல்வரை நேரடியாக எச்சரித்த நடிகர் ரஜினிகாந்த் -...

நடிகர் சிவாஜிக்கு நடந்த விழாவில் அன்றைய முதல்வரை நேரடியாக எச்சரித்த நடிகர் ரஜினிகாந்த் – நடந்த சம்பவத்தை சொன்ன பிரபலம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக உருவான பிறகு அவர் எதிலும் துணிச்சலாக இருந்தார். இப்போது இருப்பதைப் போல் ரஜினிகாந்த் அமைதியானவராக, ஆன்மீகவாதியாக பொறுமையானவராக அப்போது இருந்தது இல்லை. அப்போதெல்லாம் அவருக்கு அதிக அளவில் கோபம் வரும்.

எதைப் பற்றியும் யோசிக்காமல் யாரைப் பற்றியும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக அஞ்சாமல் பேசும் ஒரு பழக்கத்தை ரஜினிகாந்த் அப்போது கொண்டிருந்தார். குறிப்பாக அந்த காலகட்டத்தில் ரஜினிக்கும் அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும் இடையே மறைமுகமான மோதல் போக்கு இருந்தது.

- Advertisement -

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஒரு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று வெளிப்படையாக விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இனியும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய அளவில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒரு சட்டசபை தேர்தலின் போது திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்தார். ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும்போது பாதுகாப்பு கருதி போலீசார் ரஜினியின் காரை நிறுத்தி சோதனை செய்வதும் அவரது கார் நிறுத்தப்பட்டு ரஜினி காரில் இறங்கி வீட்டுக்கு நடந்தே செல்வதும் போன்ற விஷயங்களும் நடந்திருக்கின்றன. இப்படி பல விஷயங்களில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு விதமான மறைமுக பனிப்போர் இருந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் வலைப்பேச்சு அந்தணன் நேர்காணலில் கூறியதாவது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது கொடுக்க பிரான்ஸ் நாட்டில் முடிவானது. அதற்காக அங்கே இருந்து விருதை சென்னைக்கு கொண்டு வந்தார்கள். சென்னையில் ஒரு ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடந்தது. அப்போது ஜெயலலிதாதான் தமிழ்நாட்டின் முதல்வர். ஒட்டுமொத்த திரையுலகமும் அந்த விழாவிற்கு வந்துவிட்டனர். ஆனால் நீண்ட நேரமாக ஜெயலலிதா வரவில்லை. இதனால் சிவாஜி ரஜினி எல்லாம் கடுப்பாகி விட்டார்கள். ஒருவழியாக ஜெயலலிதா விழாவுக்கு வந்துவிட்டார்.

அப்போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். ஆனால் ரஜினி சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டார். அந்த விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவை பார்த்து அவர் லேட்டாக வந்ததை குறிப்பிட்டு, இங்கே பாருங்க இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று விரலை உயர்த்தி பேசினார். அப்போது எல்லோருமே அதிர்ச்சியாகி விட்டார்கள். ஏனென்றால் ஜெயலலிதாவை பார்த்து எல்லோருமே நடுங்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது என்று அந்தணன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்