- Advertisement -
Homeபொழுதுபோக்குபல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு செயலில் இறங்கும் அஜித்குமார்... ஆச்சரியம் தாங்காமல் ஆனந்த கண்ணீர்...

பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு செயலில் இறங்கும் அஜித்குமார்… ஆச்சரியம் தாங்காமல் ஆனந்த கண்ணீர் விடும் ரசிகர்கள்…

- Advertisement -

இந்திய சினிமாவில் வசூல் சக்கரவர்த்திகளில் ஒருவராக விளக்குகிறார் அஜித்குமார். அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், வசூலில் என்றைக்கும் தோல்வி படமாக அமைந்ததில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வசூல் வேட்டையாடியது.

 

- Advertisement -

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதன் அறிவிப்பு கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதியே வெளியானது. லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. மகிழ் திருமேனி இதனை இயக்குவதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியது.

 

- Advertisement -

ஆனால் படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து, அக்டோபரில் தான் தொடங்கியது. அன்று முதல் இந்நாள் வரை அஜர்பைஜான் நாட்டிலேயே படத்தின் சூட்டிங் நடத்தி வருகிறார் மகிழ்திருமேனி. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்றுவரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

 

இதில் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில், படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் ஆரவ் இருவரும் கார் விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகின. அதில் இருவரும் மிகப்பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்தனர். இனிமேல் இதுபோன்ற சாகசங்களில் அஜித் ஈடுபட வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

 

இந்த படத்தின் நடுவே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவும் அஜித் சம்மதித்து விட்டார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் எடுக்கும் இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் படபிடிப்பு, வரும் பத்தாம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறாராம். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, மீண்டும் அஜித் விடாமுயற்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதேசமயம் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகாது என்றும், இந்த வருடத்தின் இறுதியில் தான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்