நடிகர் ரஜினிகாந்த், துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் நடித்த பிறகுதான், பரட்டையன் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில்தான் நடிகர் கவுண்டமணியும் பிரபலமானார். பத்த வெச்சுட்டியே பரட்ட என்ற ஒரு டயலாக் தான் அவரது பிரபலத்துக்கு காரணமாக இருந்தது.
அடுத்தடுத்த சில படங்களுடன் கமலுடன் நடித்தார். கமல் அப்போதே பெரிய நடிகராக இருந்ததால், அவருடன் நடித்ததால், ரஜினி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். ரஜினி – கமல் இணைந்து நடித்த படங்களுக்கு நல்ல மார்க்கெட் வேல்யூ கிடைத்ததால், இருவரும் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்புகள் நிறைய வந்தன.
இதையடுத்து சுதாரிக்கொண்ட ரஜினியும், கமலும் நாம் இப்படியே இணைந்து இரட்டையா்களாக நடித்துக்கொண்டு இருந்தால், தயாரிப்பாளர்கள் முன்னேறுவார்கள். நம் இருவரது தனிப்பட்ட வளர்ச்சி, முன்னேற்றம் இருக்காஉ இருவரும் இரு வழிகளில் தனித்தனியாக பயணிப்போம். அப்போதுதான் நமக்கான தனி அங்கீகாரமும் வளர்ச்சியும் கிடைக்கும் என முடிவெடுத்தார்கள்.
அதற்கேற்ப வெற்றிப்பாதையில், இருவருமே சிகரம் தொட்ட ஸ்டார் நடிகர்களாக வென்றனர்.
நடிகை ஸ்ரீதேவி பல ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், மூன்று முடிச்சு படத்தில் நான், ரஜினி, கமல் மூன்று பேருமே நடித்தோம். அந்த படத்தில் கமல் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், என் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய், ரஜினி சம்பளம் 2 ஆயிரம் ரூபாய் என்று கூறியிருந்தார். அப்போது ஒருமுறை ஸ்ரீதேவியிடம் பேசிய ரஜினி, நானும் கமல் போல பெரிய ஹீரோவாக, இப்படி கைநிறைய சம்பளம் வாங்குவேனா, என்று கேட்டிருக்கிறார். கண்டிப்பா வாங்குவீங்க என்று நான் சொன்னேன், என்று ஸ்ரீதேவி கூறியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராகி, 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கி நடித்தும், இன்னும் சம்பளம் விஷயத்தில், பணம் சம்பாதிக்கும் விஷயத்தில் உஷாராகவும் மிகவும் கவனமாகவும் இருக்கிறார் என்பதை, சமீபத்தில் நடந்த லால் சலாம் பட விழாவில் அவரே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.
அதாவது லால் சலாம் படத்தின் கதையை மகள் ஐஸ்வர்யா, சொல்லும் போது இந்த படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்தால் நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே முகம் சுளித்த ரஜினிகாந்த், விருது கிடைக்கும் கேரக்டரில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன். அவார்டு எனக்கு முக்கியமல்ல. ரிவார்டுதான் முக்கியம். படம் கமர்ஷியலாக வெற்றி பெற வேண்டும். அப்படி என்றால் நடிக்கிறேன் என்று கூறியதாக, அவரே லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசி, இன்னும் பணம்தான் முக்கியம் என்று மனநிலையில் இருப்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.





