- Advertisement -
Homeபொழுதுபோக்குபாபாவை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் ரஜினியின் மற்றொரு படம்? இந்த முறையாவது தப்புவாரா ரஜினி..

பாபாவை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் ரஜினியின் மற்றொரு படம்? இந்த முறையாவது தப்புவாரா ரஜினி..

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் பத்தாம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு பிறகு ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்திலும், தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். லோகேஷ் கனகராஜுடன் இணையும் படம்தான் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கும் என தகவல் வெளியானது ஆனால் அந்தத் தகவலில் உண்மை இல்லை என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

இதற்கிடையே தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாசாரம் பெருகியிருக்கிறது. ஏற்கனவே வெளியாகி மெகா ஹிட்டான படங்களை டிஜிட்டல்மயமாக்கி வெளியிடுகிறார்கள். அப்படி முதல் மரியாதை, வேட்டையாடு விளையாடு, பாபா உள்ளிட்ட படங்கள் மறு முறை வெளியிடப்பட்டன. அவற்றுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக அண்மையில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். முதன்முறை ரிலீஸாகும்போது எப்படி அதற்கு ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதே அளவு ரெஸ்பான்ஸ் இரண்டாவது முறை ரிலீஸாகும்போதும் இருந்தது. இதனை கௌதம் மேனன், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ரொம்பவே ரசிக்கவும் செய்தனர். அதனையொட்டி சில ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர். படம் ரீ ரிலீஸில் ஒரு கோடி ரூபாய் வசூலித்திருப்பதகா கூறப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு படத்துக்கு முன்னதாகவே ரஜினி பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தார். தனது கரியரில் மிகவும் ரசித்து ரஜினி நடித்த படம் பாபா. அவரே கதையும் எழுதினார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆனால் 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படுதோல்வியையே ரஜினிக்கு பரிசளித்தது. விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பாபாவை ரீ ரிலீஸ் செய்தார் ரஜினி. முதன்முறை ரிலீஸ் செய்தபோதுதான் வரவேற்பு கிடைக்கவில்லை இந்த முறையாவது வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தோடு சில காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங்கும் பேசினார். ஆனால் முதன்முறை படத்துக்கு என்ன ரிசல்ட் கிடைத்ததோ அதே ரிசல்ட்தான் ரீ ரிலீஸிலும் கிடைத்தது. இதனால் ரஜினி கொஞ்சம் அப்செட் என்றே திரை வட்டாரம் பேசியது.

இந்நிலையில் ரஜினியின் இன்னொரு படம் ரீ ரிலீஸாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 1995ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியானது முத்து. ரஜினியின் மெகா ப்ளாக் பஸ்டர்களில் முத்து படமும் ஒன்று. இந்தப் படத்துக்கு பிறகுதான் அவருக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். தற்போது அந்தப் படத்தைதான் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்கான வேலைகளும் தொடங்கியிருக்கிறதாம். மேலும் படத்தை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

கமல் ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீஸில் சக்கைப்போடு போட்டது. அதேபோல் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கவனித்த ரஜினி கமலுக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் முத்துவை களமிறக்க அவர் முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்