- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல, நான் இராணுவ பின்னணியில் இருந்து வந்தவள் - நடிகை...

என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல, நான் இராணுவ பின்னணியில் இருந்து வந்தவள் – நடிகை ரகுல் ப்ரீத் சிங் தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் 1 ஸ்பைடர் என்ஜிகே அயலான் இந்தியன் 2 தடையற தாக்க தேவ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக அவர் உள்ளார்.

சமீபத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளுடன் அவரை தொடர்பு படுத்தி வெளியான செய்திகள் குறித்து நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார். தன் மீது பரப்பப்படும் பொய்யான தகவல்களை மறுத்துள்ள அவர் அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, உண்மைகளை சரிபார்க்காமல் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் இராணுவப் பின்னணியில் இருந்து வந்தவர் என்றும் கடும் உழைப்பால் மட்டுமே தனது வாழ்க்கையை கட்டி எழுப்பியுள்ளதாகவும் அந்த பதிவில் ரகுல் பிரீத்தி சிங் கூறியிருக்கிறார். நான் 20 வயதிலிருந்து முறைப்படி வரி செலுத்தி வருகிறேன்,

தனிப்பட்ட முறையில் அல்லது எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சட்டவிரோத வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ யாருக்காகவும் எந்த ஒரு பினாமி சொத்தையும் நான் வைத்திருக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பொய்யான தீங்கிழைக்கும் மற்றும் யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டவர்கள் அவற்றை உடனடியாக திரும்பப்பெற்று உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். ஊடகங்களின் வணிக ரீதியான அழுத்தங்கள் ஒருவரின் உண்மை தன்மை நற்பெயர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அவர் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த விரிவான அறிக்கையின் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ரகுல் பிரீத் சிங் தனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக அவர் மீதாக புகார்கள் சமூக வலைதள ஊடகங்களில் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய ஒரு விளக்கத்தை நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்