- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை மிஸ் செய்துவிட்டேன். அதை நினைத்து இப்போதும் பீலிங் செய்கிறேன் - நடிகை ரகுல்...

அந்த விஷயத்தை மிஸ் செய்துவிட்டேன். அதை நினைத்து இப்போதும் பீலிங் செய்கிறேன் – நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுகிற வேதனையை பார்த்து உச்சு கொட்டிய ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் தங்களது வசீகரமான அழகாலும், சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகையாக இருந்தார்.

தமிழில் வெளியான தடையற தாக்க, அயலான், தீரன் அதிகாரம் 1, இந்தியன் 2, ஸ்பைடர், தேவ், என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். இன்னும் சில ஆண்டுகள் அவர் சினிமாவில் நீடித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரகுல் ப்ரீத் சிங் நடித்த தீரன் அதிகாரம் 1, ஸ்பைடர் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. ஆனால் அயலான் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்தியன் 2 படமும் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அதே போல் தேவ் மற்றும் என்ஜிகே படங்களும் தோல்வி படங்களாக இருந்தும், ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதனால் இந்திய சினிமாவில் கவனிக்கப்பட்ட ஒரு நடிகையாக அவர் இருந்த நிலையில் திடீரென திருமணம் செய்துக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதே இல்லை என்று அறிவிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர் தவறவிட்ட ஒரு முக்கியமான படம் குறித்து தனது கவலையை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 2016ம் ஆண்டில் இந்தியில் வெளிவந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படமான எம் எஸ் தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனேன்.

ஆனால் அந்த சமயத்தில் தெலுங்கில் ராம் சரணுடன் புரூஸ்லீ என்ற படத்தில் நான் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சனையால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில்தான் திஷா பதானி நடித்திருந்தார். ஆனால் இன்றும் அந்த நல்ல படத்தில் நடிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன் என்று ரகுல் ப்ரீத் சிங் கவலையுடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்