நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரூ. 540 கோடிக்கு மேல் வசூலித்த படம் லியோ. நடிகர் விஜய் நடித்த இந்த படம் 12 நாட்களில், இந்த வசூல் சாதனையை புரிந்ததால், படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், சென்னை இண்டோர் ஸ்டேடியத்தில் வெற்றி விழாவை நடத்த ஏற்பாடு செய்தார்.
லியோ ரிலீஸ் செய்வதற்கு முன், கடந்த செப்டம்பர் 30ம் தேதி. நேரு இண்டோர் ஸ்டேடியத்தில், லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்பு அது நடக்கவில்லை. அந்த குறையை தீர்க்கும் வகையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த வெற்றி விழாவை நடத்த விஜய் சம்மதித்தார்.
நேற்று மாலை நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஷ்கின், அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், மேயாத மான் படத்தின் டைரக்டர் ரத்னக்குமார் உள்ளி்ட்டோர் கலந்துக்கொண்டனர்.
ரத்னக்குமார் மேயாத மான், ஆடை, குலுகுலு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விக்ரம் படத்தின் கதை வசனகர்த்தா இவர்தான். லியோ படத்தில் இணை எழுத்தாளராக ( கோ ரைட்டர்) ஆகி, பணிபுரிந்தார். இடைவேளைக்கு பிறகு லியோ படத்தின் இடைவேளைக்கு பிறகான சொதப்பலுக்கு ரத்னக்குமார்தான் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லியோ பட வெற்றி விழாவில் பேசிய ரத்னக்குமார், கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசி எடுத்தால் கீழே இறங்கி வந்துதான் ஆக வேண்டும் என்று பேசினார். இது, ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதையில், கழுகு மேலே மேலே சென்று கொண்டே இருந்தது என குறிப்பிட்டதற்கு, பதில் சொல்லும் விதமாக, இந்த கருத்தை ரத்னக்குமார் பதிவு செய்தார்.
இது ரஜினி ரசிகர்களிடையே வைரலானதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று ரத்னக்குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் எக்ஸ் பதிவில், நான் ஆப்லைனில் எழுதுவதற்காக செல்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை, சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகி கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரஜினியை பற்றி தவறாக பேசினால், இப்படித்தான் பயந்து ஓட வேண்டும் என, ரஜினி ரசிகர்கள் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.





