- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை தொடர்ந்து இயக்குனர் ராம்கோபால் வர்மா இப்போது விமர்சித்திருப்பது எதை பற்றி தெரியுமா? - நீங்க...

ரஜினியை தொடர்ந்து இயக்குனர் ராம்கோபால் வர்மா இப்போது விமர்சித்திருப்பது எதை பற்றி தெரியுமா? – நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா சார்…

- Advertisement -

இந்தியில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராம்கோபால் வர்மா. சினிமா பற்றியும் நடிகர் நடிகைகளை பற்றியும் வெளிப்படையான கருத்துகளை சொல்பவர். அதனால் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கலாய்த்து ராம்கோபால் வர்மா பேசியது வைரலானது.

சமீபகாலமாக ரஜினி நடிக்கும் படத்தின் பாதி வரை ஸ்லோ மோஷனில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரை நல்ல நடிகராக என்னால் சொல்ல முடியாது என வில்லங்கமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஸ்லோ மோஷன் போன்ற தொழில்நுட்பம் சினிமாவில் இருந்திருந்தால் ரஜினிகாந்த் இவ்வளவு காலம் தாக்கு பிடித்திருப்பாரா என்பதே சந்தேகம்தான் என்றும் விமர்சித்து இருந்தார்.

- Advertisement -

ரஜினிகாந்த் குறித்து பேசிய பரபரப்பை ஏற்படுத்திய பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இப்போது மாபெரும் வெற்றிப் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கேஜிஎப் 2 படம் குறித்தும் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார். அந்த படம் குறித்த அவரது கிண்டல் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

கேஜிஎப் 2 படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியதாவது, கே ஜி எப் 2 படத்தை பார்க்க துவங்கியதுமே 15 நிமிடங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அந்த படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்காக பால்கனிக்கு வந்து வெளிக்காற்றை நன்றாக சுவாசித்து கொஞ்ச நேரம் யோகா பயிற்சி செய்தேன். அதன் பிறகு தான் மீண்டும் என் இருக்கைக்கு சென்று அடுத்த 15 நிமிடங்கள் படத்தை தொடர்ந்து பார்த்தேன். மீண்டும் அதே போல்தான் படம் தொடர்ந்தது.

- Advertisement -

இடைவேளைக்கு பிறகு உன்னால் இந்த படத்தை முழுதாக பார்க்க முடியாது, பேசாமல் படம் பார்ப்பதை நிறுத்தி விடு என்று என்னுடைய மனமே எனக்கு கட்டளையிட்டது. அடுத்த முறை என்னுடன் ஒரு எழுத்தாளரையும் வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்தேன். அவரும் படம் பார்க்கும்போது இந்த காட்சியில் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறதே, எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று அடிக்கடி என்னை கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் இப்படித்தான் சொன்னேன். படத்தின் கதை பற்றி விவாதிக்கலாம், படத்தின் வெற்றி பற்றி விவாதிக்கவே முடியாது. நம் இருவருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த படம் பிடித்திருக்கிறது. என்ன செய்வது என்றுதான் அவருக்கு பதில் சொன்னேன் என்று அந்த நேர்காணலில் கேஜிஎப் 2 படத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

- Advertisement -

சற்று முன்