- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் நாயகன் என்பதை இப்போதும் நிரூபித்துக் காட்டிய ராமராஜன், ரஜினி விஜய்க்கு எல்லாம் இவர் மாதிரி...

மக்கள் நாயகன் என்பதை இப்போதும் நிரூபித்துக் காட்டிய ராமராஜன், ரஜினி விஜய்க்கு எல்லாம் இவர் மாதிரி யோசிக்க நேரம் இருக்குமா? – 110 நாள் ஓடிய சாமானியன் கதை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1980 – 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். அப்போது ராமராஜன் படங்கள் என்றாலே மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதும். பெரிய நகரங்களில் ராமராஜனின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், சிறு நகரங்கள் குறிப்பாக கிராமங்களில் ராமராஜன் படங்கள் என்றாலே அங்கு தினமும் திருவிழா கூட்டமாக தான் இருக்கும்.

ஏனென்றால் அவர் நடித்த படங்கள் எல்லாமே கிராமிய கதைகள்தான். கிராமத்து கதைக்களங்களை கொண்ட படங்கள் தான். கலர் கலரான சட்டைகளில், பூந்தோட்டங்களுக்குள், கிராம வயல்களில் அவரது நடன காட்சிகளும், பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

- Advertisement -

குறிப்பாக ராமராஜன் படம் என்றாலே, இளையராஜா இசை கவுண்டமணி செந்தில் காமெடி என்று இருந்தாலே அந்த படம் கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராமராஜன் படங்களின் கதைகள் பெரும்பாலும் அதிரடியான கதைகளாக, ஆக்சன் படங்களாக பெரிய திருப்புமுனை கொண்ட கதை அம்சங்களோ இருக்காது. ஆனால் நல்ல பொழுதுபோக்கு படங்களாக இருக்கும்.

ராமராஜன் நடித்த படங்களை பார்க்கச் சென்றால் இரண்டு மணி நேரம் மனம் விட்டு அந்த படத்துடன் ஒன்றி பொழுதுபோக்காக பார்த்துவிட்டு வரலாம் என்பது தான் உண்மை. குடும்பத்துடன் பார்க்கும் படங்களாகவும் இருக்கும். அந்த வகையில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக ராமராஜன் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகராக அன்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜன் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் இன்றளவும் தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளப் படமாக இருக்கிறது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் நடிகர் ராமராஜன் ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறி அதிமுகவின் தொண்டராக மாறினார். அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார். அதிமுக பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். ஒருமுறை அவர் பிரச்சாரத்துக்கு சென்று விட்டு நள்ளிரவில் காரில் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்தார். மீண்டும் மறுபிறவி எடுப்பது போல் பிழைத்து வந்த ராமராஜன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ராமராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாமானியன். இந்தப்படம் 110 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. இதற்கு காரணம் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் ராமராஜன் நேரடியாக சென்று அந்த தியேட்டர் ஓனரை சந்தித்துள்ளார். தினமும் ஒரு காட்சி என திரையிடுங்கள், டிக்கெட் விலையை ரூ.50 ரூபாய் என குறைத்து ரசிகர்களுக்கு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். ராமராஜனின் தீவிர ரசிகரான அந்த தியேட்டர் உரிமையாளரும் தினமும் ஒரு காட்சி சாமானியன் படத்தை ஓட்டிய நிலையில், 110 நாட்கள் இந்த படங்கள் ஓடி இருக்கிறது. மேலும் 50 ரூபாய் டிக்கெட் என்பதால் ரசிகர்களும் பெருமளவில் சாமானியன் படம் பார்க்க வந்திருக்கின்றனர். இதுபோல் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் யோசிக்க கூட மாட்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்