நடிகை ரம்பா தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் 1990களில் கனவு கன்னியாக வாழ்ந்தவர். பிரபு நடித்த உழவன் படத்தில்தான் ரம்பா அறிமுகமானார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரம்பா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் சுந்தர் சியின் முதல் படமாக இருந்து, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ரம்பா நடித்தார். அருணாசலம், காதலா காதலா, குங்கும பொட்டுக்கவுண்டர், அழகான நாட்கள், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், தர்மசக்கரம், ஜானகிராமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
ரம்பாவை பொருத்தவரை தொடை அழகி என்ற பெயர்தான் அவருக்கு ரசிகர்கள் தந்தது. ஆனால் முக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிஸியான நடிகையாக இருக்கும்போது திருமணமாகி, வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தும் மீண்டும் சினிமாவில் நடிக்க ரம்பா ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் சினிமா நண்பர்கள் வட்டாரத்தில் தொடர்ந்து நட்பில் இருந்து வருகிறார் ரம்பா. நடிகைகள் சந்திப்பு நிகழ்ச்சி என்றால் ரம்பா வந்து கலந்துக்கொள்கிறார். அதுபோல் வெளிநாடு செல்லும் நடிகர், நடிகைகளும் ரம்பா வீட்டுக்குச் சென்று அவருடன் நாட்களை கழித்துவிட்டு வருகின்றனர். அப்படி நட்பு வட்டாரத்தில் இன்னும் இருந்து வருகிறார் ரம்பா.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ரம்பா பேசியிருக்கிறார். அப்போது நடிகர் அஜீத்குமார் பற்றி ரம்பா கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன் அவருடன் ராசி படத்தில் நடித்தேன்.அவர் எப்போதும் என்னுடன் பேசிக்கொண்டே இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத், நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது அப்படி இருந்த அஜீத், இப்போது எப்படி இருப்பார் என்று தெரியவில்லை.
எனக்கு ஏஆர் ரகுமானை மிகவும் பிடிக்கும். அவரது இசையில் பாடல்களை மிகவும் ரசிப்பேன். அதனால் இன்ஸ்டாகிராமில் அவரை பாலோ செய்தேன். ஆனால் அவர் என்னை அக்செப்ட் பண்ணவே இல்லை. அதனால் நானும் அவரை அன் பாலோ செய்துவிட்டேன் என்று அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் ரம்பா. தமிழில் நடிக்க ரம்பாவுக்கு சில வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், அவர் அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.





