- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 12 நாட்களில் தி கோட் படம் மொத்தமாக செய்த வசூல் செய்தது எத்தனை கோடி?...

கடந்த 12 நாட்களில் தி கோட் படம் மொத்தமாக செய்த வசூல் செய்தது எத்தனை கோடி? தமிழ்நாட்டில் மட்டும் தளபதி வசூலித்தது எவ்வளவு? – ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இம்மாதம் 5ம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 12 நாட்களை கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தி கோட் ரிலீசான முதல் நாள் உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 38.3 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. மேலும் துவக்கத்தில் படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளியாகின. அதனால் ஆரம்பத்திலேயே வசூலில் பெரும் சறுக்கல் ஏற்பட்டது.

- Advertisement -

தி கோட் படம் ஏற்கனவே வெளிவந்த ராஜதுரை என்ற எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தின் தழுவல் தான் என்றும், ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து தான் வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்றும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை வழக்கமான அப்பா மகன் சண்டை கதைதான் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும் இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களை கடந்து தி கோட் படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூல் மழை பொழிந்தது. குறிப்பாக இந்த படத்தில் மகன் கேரக்டரில் நடித்திருந்த விஜயின் வில்லன் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அவரது நையாண்டித்தனமான, நடிப்பை ரசிகர்கள் பெரிதாக விரும்பி வரவேற்ற நிலையில் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

- Advertisement -

எனினும் கடந்த சில தினங்களாக தியேட்டர்களில் போதிய கூட்டம் இல்லை என்று தியேட்டர் நிர்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது. வழக்கமாக விஜய் படம் என்றாலே பாடல்களும் இசையும் வேற லெவலில் இருக்கும். ஆனால் இந்த படத்துக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பாடல்களிலும் பின்னணி இசையிலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதை உண்மை.

தி கோட் படம் வெளிவந்து 12 நாட்கள் ஆன நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரைக்கும் 170 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் 200 கோடி ரூபாயை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் 12 நாட்களில் தி கோட் படம் இதுவரை 390 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. விரைவில் 400 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் வெளிவந்த லியோ படம், உலகளவில் 598 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் லியோ படத்துடன் ஒப்பிடும்போது வசூலில் தி கோட் படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்