- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 லிஸ்ட்டில் கேம் சேஞ்சர் படமும் வந்துவிடுமா? டிமிக்கி தரும் நடிகர் ராம்சரண்,...

இந்தியன் 2 லிஸ்ட்டில் கேம் சேஞ்சர் படமும் வந்துவிடுமா? டிமிக்கி தரும் நடிகர் ராம்சரண், அந்த விஷயத்துக்காக போராடும் இயக்குனர் ஷங்கர் – படம் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவர் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை, வரவேற்பை பெறும். பல வெற்றிப் படங்களை தந்தவர். ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜூன் நடிப்பில் பல முக்கிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

ஆனால் அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த இந்தியன் 2 படம், அவரது பெயரையே டேமேஜ் ஆக்கி விட்டது. இதுவரை சிறந்த இயக்குனர் ஷங்கர் என்ற ரசிகர்களிடம் இருந்த இமேஜையே டேமேஜ் ஆக்கி விட்டது. உண்மையில் இது ஷங்கர் இயக்கிய படம்தானா என்ற சந்தேகத்தையே ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

- Advertisement -

ஏனெனில் 28 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஷங்கர், அதன் தொடர்ச்சியாக இயக்கிய இந்தியன் 2 படத்தை அதைவிட பலமடங்கு சிறப்பாக தருவார் என்று தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்களை, இந்தியன் தாத்தா கதற விட்டு விட்டார். கார்த்தி நடித்த ஜப்பான் படத்துக்கு பிறகு ரசிகர்களை அப்செட் செய்த படம் இந்தியன் 2 தான்.

அதனால் இந்தியன் 3 படத்தை சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் கமலும், ஷங்கரும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதற்காக காட்சிகளில் மாற்றங்கள் செய்து ரி ஷூட் செய்யவும், அதற்கான செலவை கமல்ஹாசனே ஏற்றுக்கொள்வதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வரும் ஜனவரிக்கு பதிலாக ஏப்ரல் மே மாதங்களில் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை ஷங்கர் இயக்கிய போது, இடையிடையே நடிகர் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கினார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்து, சமீபத்தில்தான் முடிவடைந்தது.

கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தில் நடிக்க ராம்சரண் சென்றுவிட்டார். இந்தியன் 2 படம் தந்த பலத்த அடியால் நொந்து போயிருக்கும் இயக்குனர் ஷங்கர், கேம் சேஞ்சர் படத்தில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஆனால் படத்தை ரஷ் பார்த்த வகையில், சில காட்சிகளில் திருத்தம் வேண்டும் என்று ஷங்கர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக 5 நாட்கள் ராம்சரணிடம் ஷங்கர் கால்ஷீட் கேட்ட நிலையில், ஏற்கனேவ ஏகப்பட்ட நாட்கள் தந்துவிட்டதாக கூறி அவர் மறுத்திருக்கிறார். இதனால் கேம் சேஞ்சர் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்