இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்கள் சிறந்த நடிகர்கள் நடிகைகளுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர் சிறந்த ஒளிப்பதிவாளர் சிறந்த ஒலி வடிவமைப்பு சிறந்த பின்னணி இசை சிறந்த பாடகர் சிறந்த பாடகி சிறந்த குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட சினிமாவில் பல்வேறு துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் வழங்கப்படும் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வருகிற 22ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழாவில் பங்கேற்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். கடந்த 1954ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருது விழாக்கள் 71 ஆண்டு காலமாக தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.
தற்போது முதல் முறையாக இந்த மரபு உடைக்கப்பட்டு தலைநகருக்கு வெளியே குஜராத்தில் இந்த விழா நடைபெறுகிறது. 1974ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை திரைப்பட விழாக்கள் டிஎஃப்எஃப் இயக்ககத்தால் நடத்தப்பட்டு வந்த இந்த விழா, கடந்த 2022ம் ஆண்டு முதல் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் என்எஃப்டிசி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கா விருதுகள் அறிவிக்கப்பட்ட படங்கள் ஆர்டிகில் 370. சிறந்த நடிகையாக யாமி கௌதம் சிறந்த நடிகர் மலையாள படத்தில் பிரம்மயுகம் படத்தில் நடித்த நடிகர் மம்முட்டி, சந்து சேம்பியன் படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகர்களாக விருதைப் பெறுகின்றனர்.
சிறந்த அறிமுக இயக்குனர் விருதை சுவதந்திரிய வீர் சவர்க்கர் படத்தை இயக்கிய ரன்தீப் ஹூடோ சிறந்த அறிமுக இயக்குனர் விருது பெறுகிறார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் கல்கி 2898 ஏடி சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் தேசிய விருது பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





