- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இணையும் டான் பட கூட்டணி... இந்த முறை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா...

மீண்டும் இணையும் டான் பட கூட்டணி… இந்த முறை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு, அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் இதன் இயக்குனர். படத்தில் கதாநாயகியாக, சாய் பல்லவி நடித்திருக்கிறார். இதனை கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

- Advertisement -

இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக, கச்சிதமான உடலமைப்பை பெறுவதற்கு அவர் தீவிர உடற்பயிற்சியின் ஈடுபட்டார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தான் இந்த திரைப்படம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

- Advertisement -

ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. தற்போது அமரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

 

இது மட்டுமல்லாமல் இந்த கதையை விஜய்க்காக தான் ஏ ஆர் முருகதாஸ் தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில், இந்தக் கூட்டணி பிரிந்து போக, அதே கதையை சிவகார்த்திகேயனுக்கு ஏ ஆர் முருகதாஸ் கூறி கால்ஷீட் வாங்கியதாக தெரிகிறது. விரைவில் இந்த படத்திற்கான, சூட்டிங்கை முடித்துவிட்டு சல்மான்கான் இயக்குவதற்காக முருகதாஸ் பாலிவுட்டிற்கு செல்கிறார்.

 

இதனிடையே சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் இணைகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான டான் திரைப்படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதே வேளையில் தந்தை பாசம் என்று கூறி நிறைய காட்சிகள் கிரின்ச் ஆக இருந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இப்படியான சூழலில், இவர்கள் மீண்டும் இணையும் படத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் ஆரம்பித்து விட்டன. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதற்கான சூட்டிங் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்