தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அவர், 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அஞ்சனி புத்ரா, சமக் என தொடர்ந்து அவருக்கு கன்னட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது.
இப்படியான சூழலில் ரஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது கீதா கோவிந்தம் திரைப்படம். 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. அதற்கு முன்பு கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்த அவருக்கு இந்த திரைப்படம் இரண்டாவது தெலுங்கு படமாக அமைந்தது. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதுவும் அந்த படத்தில் இடம்பெற்ற இன்கம் இன்கம் காவாலே பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று கூறலாம். தெலுங்கு திரை உலகை தாண்டி, இந்திய திரை உலகம் முழுவதும் அந்த பாடல் இசைக்கப்பட்டது. ஒரு பாடலின் மூலமே புகழின் உச்சிக்கு சென்றார் ராஷ்மிகா மந்தனா. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அவரது நடிப்பும் பலரையும் கவரும் வகையில் இருந்தது.
கிட்டத்தட்ட படத்தின் முக்கால்வாசி இடங்களில், அவர் நாயகன் விஜய தேவரகொண்டாவை எதிர்ப்பது போலவே காட்சிகள் இடம் பெற்று இருந்தது பலரையும் ரசிக்கச் செய்தது. பிறகு இவருக்கு தமிழில் சுல்தான் திரைப்படம் அறிமுக படமாக அமைந்தது. அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார் கதாநாயகி. இருப்பினும் அதே ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் அவர் நடித்தார். தனது இரண்டாவது தமிழ் படத்திலேயே அவர் மிகப்பெரிய நட்சத்திரத்துடன் இணைந்து விட்டதாக பலரும் வாழ்த்தினர். தெலுங்கு தமிழ் மட்டுமல்லாமல் அனிமல் திரைப்படத்தின் மூலம் இந்தி மூலம் இருக்கும் அறிமுகமானார். அது மட்டுமல்ல அதில் தனது கவர்ச்சிக்கும் தாராளம் கொடுத்திருந்தார். தற்போது அவர் புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் 51 வது படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இதனை இயக்குகிறார். இதில் நாகர்ஜுனும் நடிக்கிறார். இதற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து பேசி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் என்னிடம் படத்தை கதையை கூறிய போது நான் நிச்சயம் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய போர்ஷன்கள் அடுத்த மாதம் தான் தொடங்குகிறது. தனுசுடன் பணிபுரிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சம்பந்தப்பட்ட திரைத்துறையில் திறமையாக இருப்பவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளப் போவதை நினைத்து நான் இப்போது உற்சாகம் அடைந்துள்ளேன் என்று கூறுகிறார்.





