- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல்வாதியாக களத்தில் இறங்கிட்டாரே? 34வது படத்தின் டைட்டில் கராத்தே பாபு - கெத்து காட்டி அசத்திய...

அரசியல்வாதியாக களத்தில் இறங்கிட்டாரே? 34வது படத்தின் டைட்டில் கராத்தே பாபு – கெத்து காட்டி அசத்திய ஜெயம் … ஸாரி ரவி மோகன்!

- Advertisement -

கடைசியாக பெரிய அளவில் வெற்றியை, வரவேற்பை பெற்றுத் தந்த படம் கோமாளி. அதற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த பல படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தன. அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் என எந்த படங்களும் அவருக்கு நினைத்த வெற்றியை தரவில்லை. இதனால் ஜெயம் ரவி, தோல்வி ரவி ஆகி விட்டார்.

இதையடுத்து தனது பெயர் இனிமேல் ஜெயம் ரவி அல்ல, ரவி மோகன் என மாற்றி அறிவித்த அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம், பொங்கலுக்கு வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்த படத்தில் ரவி மோகனுடன் நித்யாமேனன் நடித்திருந்தார். பெயரை மாற்றிய பிறகும், ரவி மோகனுக்கு ஜெயம் கிடைக்கவில்லை.

- Advertisement -

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பராசக்தி. இதில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். நடிகர் முரளி மகன் அதர்வா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரவி மோகன் நடிக்கும் அவரது 34வது படத்தின் அறிவிப்பு, படத்தின் தலைப்புடன் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு கராத்தே பாபு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக டீஸரும் இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக ரவி மோகன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை கணேஷ் கே பாபு டைரக்ட் செய்துள்ளார். சண்முக பாபு என்ற பெயரில் இந்த படத்தில் ஆர்கே நகர் சட்டசபை தொகுதி ஆளுங்கட்சி எம்எல்ஏவாக ரவி மோகன் நடித்திருக்கிறார். படத்தில் முதலமைச்சராக நாசர், எதிர்கட்சி தலைவராக கேஎஸ் ரவிக்குமாரும் நடித்துள்ளனர்.

அனல் பறக்கும் அரசியல் படமாக இது, ரவி மோகனுக்கு விலகிப் போன ஜெயத்தை மீண்டும் கொண்டு வந்து கொடுக்குமா, என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் ரவி மோகன் நடித்துள்ள மற்றொரு படம் ஜீனி குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் உள்ளது. ஜீனி கராத்தே பாபு 2 படங்களும் கம்பேக் படங்களாக ரவி மோகனுக்கு அமையலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்