- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் இழிவான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்… ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் - நடிகர் ரவிமோகன் ஆவேசம்!

உங்கள் இழிவான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்… ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் – நடிகர் ரவிமோகன் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரவி. இந்த படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு அவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி வனமகன் பேராண்மை உனக்கும் எனக்கும் தனி ஒருவன் போகன் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரவிமோகன் தோல்வி படங்களை கொடுத்தார். அவர் நடித்த அகிலன் இறைவன் பிரதர் சைரன் 108 காதலிக்க நேரமில்லை என பல படங்கள் பிளாப் படங்களாக இருந்தன. இதற்கிடையே அவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் அவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஆர்த்தியை, ஜெயம் ரவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

தனது ஜெயம் ரவி என்ற பெயரை கடந்த ஆண்டில் அவர் ரவிமோகன் என்றும் மாற்றிக் கொண்டார். கணவன் மனைவி இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. நடிகர் ரவி மோகன் தற்போது பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இப்போது நடிகர் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தது மற்றும் பாடகி கெனிஷாவுடன் அவரது நெருக்கமான நட்பு குறித்து கடும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சமயங்களில் அமைதியாகவும் சில நேரங்களில் ரவிமோகன் அதற்கு பதிலும் தந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் தனது வலைதள பக்கத்தில், ஆசை அன்பினில் என்ற பாடலை வெளியிட்டுள்ள ரவி மோகன் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ரவிமோகன் கூறியிருப்பதாவது, நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் தான் எப்போதும் சரி என்று நீங்கள் அனைவரும் கருதுவதால் நீங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆண்களே பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்.

நமது நீதித்துறை கூட இந்த உண்மையை உணர்ந்துள்ளது. ஒரு நாள் என் மனதைப் பற்றியும் நான் நேசிக்கும் மக்களுக்காக நான் செய்த தியாகங்களைப் பற்றியும் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தயவு செய்து ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள். உங்கள் இழிவான எண்ணங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் என் பாதையில் பயணிக்க செல்கிறேன் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். நடிகர் ரவிமோகனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்