- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் இசை வெளியீடு இப்போதைக்கு இல்லை, ரிலீஸ் தேதியும் தள்ளி போட்டாச்சு - கமல், ஏஆர்...

ராயன் இசை வெளியீடு இப்போதைக்கு இல்லை, ரிலீஸ் தேதியும் தள்ளி போட்டாச்சு – கமல், ஏஆர் ரகுமான்தான் இதற்கு காரணமா? – என்னப்பு சொல்றீங்க?

- Advertisement -

நடிகர் தனுஷ், நடிப்பதை போலவே படங்களை இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் ப பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து, இப்போது ராயன் என்ற தனது 50வது படத்தை அவரே இயக்கி உள்ளார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற காதல் காமெடி படத்தையும் அவரே டைரக்ட் செய்துள்ளார். இந்த படங்களை தனுஷ் டைரக்ட் செய்து முடித்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படங்களை தொடர்ந்து இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதையடுத்து, இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ், இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா படத்தின் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிடப்பபட்டுள்ளது.

- Advertisement -

இரண்டு பாகங்களாக, இளையராஜா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இளையராஜாவின் இளமை கால பண்ணைபுரத்து வாழ்க்கை, பாவலர் சகோதர்களின் ஆரம்பகால இசை பயணம், இளையராஜா சென்னை வருகை வரை ஒரு பாகமும், பிறகு அன்னக்கிளி பட வாய்ப்பு முதல் இப்போதைய அவரது வாழ்க்கை வரை 2ம் பாகத்திலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 பாகங்களிலும் இளையராஜாவாக நடிக்க தனுஷ்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 2ம் தேதி, சென்னையில் உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்த விழா, இப்போதைக்கு நடக்கவில்லை. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் வருகிற ஜூன் 1ம் தேதி, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பதால், அந்த விழா நடந்த அடுத்த நாள் ராயன் இசை வெளியீட்டு விழா நடந்தால், சரியாக எடுபடாது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்காது என இந்த முடிவை தனுஷ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராயன் படத்தின் இசை வெளியீடு தள்ளிப் போவதால், படத்தின் ரிலீஸ்சும் ஜூன் 13 என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஏஆர் ரகுமான் இன்னும் ஆர்ஆர் இசையை முடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்தின் சில காட்சிகள் போதிய திருப்தி இல்லாததால் அந்த காட்சிகளை ரி ஷூட் பண்ண வேண்டியிருப்பதாலும் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க தனுஷ் முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்