- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் திரைக்கு வரும் விஜயின் சூப்பர் ஹிட் படம் - திடீரென ரி ரிலீஸ் தள்ளி...

மீண்டும் திரைக்கு வரும் விஜயின் சூப்பர் ஹிட் படம் – திடீரென ரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? – படக்குழு தந்த விளக்கம்!

- Advertisement -

கடந்த 1980 90களில் வெளியான சில சூப்பர் ஹிட் படங்கள் இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றன. ஏனெனில் டிவியில் பார்க்கப்பட்ட அந்த படங்கள் மீண்டும் தியேட்டர் அனுபவத்தை தரும் என்பதால் அவை மீண்டும் தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அப்படி பல படங்கள் இப்போது மீண்டும் திரைக்கு வருகின்றன. அந்த வகையில் ரஜினி நடித்த முத்து படம் விஜய் நடித்த கில்லி சச்சின் கமல் நடித்த ஆளவந்தான் குணா விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் சத்யராஜ் நடித்த அமைதிப்படை உள்ளிட்ட படங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் திரிஷா நடிப்பில் மாஸ் ஹிட் ஆன திருப்பாச்சி படமும் ரி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இயக்குனர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் விஜய் திரிஷா இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை வருகிற அக்டோபர் 1ம் தேதி ரி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது திருப்பாச்சி படம் ரி ரிலீஸ் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் விஜயின் மகன் இயக்குனர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

அதனால் திருப்பாச்சி ரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் பல புதிய படங்கள் திரைக்கு வர உள்ளதால் அந்த படைப்புகளை ஊக்குவிக்கவும் தமிழ் சினிமாவில் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும் திருப்பாச்சி படம் ரி ரிலீஸ் தற்காலிகமாக சில காலம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் சிக்மா. லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கிறார். இது விஜய் மகனுக்கு முதல் படம் என்பதால், விஜய் நடித்த திருப்பாச்சி படம் ரி ரிலீஸ் காரணமாக, ஜேசன் சஞ்சய் இயக்கிய படத்தின் வசூல் பாதிக்க கூடாது என்பதால் திருப்பாச்சி படம் ரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்