- Advertisement -
தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக அதிகமாக கேரக்டருக்கான மெனக்கெடும் ஒரு அற்புத கலைஞர் நடிகர் சியான் விக்ரம் தான். ஆனால் நடிகர் சியான் விக்ரம் தொடர்ந்து வெற்றிக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார். பாலா இயக்கத்தில் சேது படம் மூலம் மாஸ் ஹீரோவாக உயர்ந்த அவர் அந்நியன் சாமி காசி உள்ளிட்ட சில படங்களுக்குப் பிறகு சமீப காலமாக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் பதிவு செய்யவில்லை. தற்போது அவர் துருவ நட்சத்திரம் கருடா பவர் ஹவுஸ் போன்ற படங்களை மட்டுமே மலை போல் நம்பி இருக்கிறார். இந்த படங்களும் சொதப்பி விட்டால் அவரது அடுத்த கட்ட சினிமா பயணம் கேள்விக்குறியாகிவிடும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.





