- Advertisement -
Homeபொழுதுபோக்குபோலீஸ் அதிகாரியாக நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் படம் - ரிலீஸ் தேதி...

போலீஸ் அதிகாரியாக நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் மணிகண்டன். காலா ஜெய்பீம் நெற்றிக்கண் ஏலே காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் துணை நடிகராக முக்கிய கேரக்டரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் மணிகண்டன். இப்போது வளரும் இளம் கதாநாயகனாக வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார்.

நடிகராக மட்டுமின்றி உதவி இயக்குனர் ஸ்கிரிப்ட் ரைட்டர் கதை ஆசிரியர் வசனகர்த்தா மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக தன்மை கொண்டவர் மணிகண்டன். அவர் நடித்த குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாக அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

யதார்த்தமான கதைக்களம் கொண்ட படங்களில் மணிகண்டன் தேர்வு செய்து நடித்து வருகிறார். காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது. ஜெய்பீம் படத்தில் விசாரணை கைதியாக நடிகர் மணிகண்டன் நடிப்பு அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த நிலையில் நல்ல ஆளுமை மிக்க கலைர் என்ற பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்தது.

நடிகர் மணிகண்டன் கடைசியாக நடித்து திரைக்கு வந்த படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி வெளியானது. மணிகண்டன் சான்வே மேகனா குரு சோமசுந்தரம் நிவேதிதா ராஜப்பன் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிகண்டன் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் மணிகண்டன் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ள மக்கள் காவலன் என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அறிமுக இயக்குனர் சந்தோஷ்குமார் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார், பிரசன்னா கே நிவாஸ் இசையமைத்துள்ளார்.

நீலம் புரடக்சன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸ் ஆகிய 2 நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி மக்கள் காவலன் படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு துவக்கத்தில் குடும்பஸ்தன் படம் வெளியான நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் காவலன் படம் திரைக்கு வருகிறது.

சற்று முன்