- Advertisement -
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை சாய்பல்லவி நடித்த இஞ்சி வெல்லம் படத்தை வரும் 2027ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நாளில் தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பாக்கெட் நாவல் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 வாரங்கள் கழித்து ஜனவரி 29ம் தேதி இஞ்சிவெல்லம் படம் ரிலீஸ் என்று இன்று மாலை படக்குழு தரப்பில் போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





