சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணாள் மேனன் சிவராஜ்குமார் மோகன்லால் எஸ்ஜே சூர்யா தெலுங்கு நடிகர் பாலய்யா விஜய் சேதுபதி சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் அந்த கேரக்டரில் தெலுங்கு நடிகர் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் நடிக்க மறுத்து விட்டார் என்று தகவல் வெளியானது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி அந்த கேமியோ ரோலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக 3 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கிடையே ஜெயிலர் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால் அதற்கு முன்பாகவே அந்த படம் வெளியாகும் என்று இப்போது லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட ஜெயிலர் 2 படம் பிறகு செப்டம்பர் மாதம் ரிலீஸ் என தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளிக்கு தான் இந்த படம் ரிலீஸ் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அக்டோபர் 16ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தை அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் தான் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உறுதிப்படுத்த உள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்க தொடங்கியுள்ள தருமன் படம் அடுத்த 2027ம் ஆண்டில் திரைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. ஆயுதபூஜை நேரத்தில் படம் வெளியானால் கலெக்சன் அள்ளும் என்றும் பேசப்படுகிறது.





