மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் இந்திரன்ஸ். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். சுரேந்திரன் கொச்சுவேலு என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்திரன்ஸ் மலையாள திரைப்பட உலகில் ஒரு குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலான மலையாள படங்களில் காமெடி கேரக்டர்களிலும் இந்திரன்ஸ் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் மட்டும் இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது யதார்த்தமான நடிப்புக்காக கேரள அரசின் மாநில விருது மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளையும் அவர் வென்றிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி குரல் கலைஞராகவும் கவனம் பெற்றவர். பல படங்களில் ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து பின்னணி குரல் கொடுத்து பேசியவர்.
இவர் தமிழில் ஆடும் கூத்து நண்பன் உள்ளிட்ட சில படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார். நண்பன் படத்தில் கல்லூரி முதல்வர் சத்யராஜூக்கு முகச்சவரம் செய்யும் கோவிந்தன் கேரக்டரில் சில காட்சிகள் மட்டுமே வருவார். இப்போது சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கேரக்டரில் இந்திரன்ஸ் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய கவனத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்துள்ளது.
தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு தனது மகளுடன் ரயிலில் வரும் இந்திரன்ஸ் நகைகளை திருடர்களிடம் பறிகொடுத்து விடுவார். பிறகு நகைகள் மீட்கப்பட்டு அதை கோர்ட்டில் திரும்ப பெற இந்திரன்ஸ் போராடுவதுதான் படத்தின் மையக்கரு. கருப்பு படத்தின் இடைவேளை வரை இந்திரன்ஸ் கேரக்டர் தான் படத்தில் பிரதானமான இருந்து கதையாக சுவாரசியமாக கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் இந்திரன்ஸ் குறித்த ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் இந்திரன்ஸ் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர். அதாவது அவர் ஆரம்ப காலத்தில் டெய்லராக பணிபுரிந்தவர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இந்திரன்ஸ் கூறியதாவது, நான் ஒரு டெய்லர். சூட்டிங்கே பார்த்தது இல்லை. நான் நாடகத்தில் காஸ்டியூம் டிசைனராக வேலை செஞ்சவன். அப்புறம் சில நண்பர்களால் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனர் ஆனேன்.
அப்புறம் சில படங்களுக்கு டப்பிங் கொடுத்தேன். பிறகு சினிமாவுக்குள் நுழைந்து நான் நடிகன் ஆனேன். என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது டெய்லர் தொழில்தான். அதனால் நான் இன்னமும் அந்த டெய்லர் தொழிலை விடாமல் இன்றும் நடத்தி வருகிறேன் என்று நடிகர் இந்திரன்ஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இப்போது 70 வயதான நிலையிலும் இந்திரன்ஸ் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





