- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் மாற்றம், இதற்காக ரூ. 6.17 கோடி செலவு -...

அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் மாற்றம், இதற்காக ரூ. 6.17 கோடி செலவு – ஊரான் வீட்டுல நெய்யில இப்படி டன் கணக்குல ஸ்வீட் செய்யலாமா? அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்!

- Advertisement -

விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி பதவியேற்றது. அப்போது அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் வைக்க உத்தரவானது. இதையடுத்து தலைமை செயலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அரசு துறை அலுவலகங்கள் ஊராட்சி நிர்வாக அலுவலகங்கள் காவல் நிலையங்கள் என விஜய் புகைப்படம் வைக்கப்பட்டது.

அந்த புகைப்படத்தில் விஜய் சிரிப்பது போல் இல்லாமல் சற்று முறைத்து பார்ப்பது போல் இருப்பதாகவும் ஒரு விமர்சனம் எழுந்தது. எனினும் பல கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் விஜய் புகைப்படம் மாற்றப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் இந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் அவர் சிரிக்காமல் இருந்த நிலையில் இப்போது விஜய் சிரித்தபடி இருக்கும் அதே கோட் சூட் கெட்டப்பில் இந்த புதிய புகைப்படம் அரசு அலுவலகங்களில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் விஜய் முதல்வரான 5 மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக அரசு தரப்பில் ரூ. 6.17 கோடி செலவானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் முதல்வர் நாற்காலி அவர் பதவியேற்ற சில தினங்களில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள சோபா டைப் ரோலிங் சேர் ஆக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த சட்டசபை தேர்தலின் போது பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், திமுக தலைமையில் நடந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை பார்த்து, ஊரான் வீட்டு நெய்யில் நீங்க ஸ்வீட் செய்யலாமா சிஎம் சார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் முதல்வராக விஜய் வந்த பிறகு மேட்டூர் அணை திறப்பு விழாவுக்கு ரூ. 6 கோடி லண்டனில் திரிஷாவுடன் கார் ரேஸ் பார்க்க ரூ. 9 கோடி என அரசு பணத்தை செலவு செய்திருந்தார்.

இப்போது அவரது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் மாற்றி மாட்டவும் ரூ. 6.17 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து மக்கள் பணத்தில் விரயமாக்கி வரும் முதல்வர் விஜயை பார்த்து, தமிழக அரசியல் கட்சிகள், ஊரான் வீட்டு நெய்யில் இப்படி டன் கணக்குல ஸ்வீட் செய்யலாமா விஜய் சார்? என்று கடுமையாக விமர்சித்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்