- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலே, ஆனா அந்த பிரபலம் நடிச்சிருக்காராமே? - என்னய்யா இது பெரிய...

கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலே, ஆனா அந்த பிரபலம் நடிச்சிருக்காராமே? – என்னய்யா இது பெரிய டிவிஸ்ட்டா இருக்குது…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நாளை மறுதினம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்தின் இசை வெளியீடு டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் நடந்த நிலையில் கூலி வைப் பெரிய அளவில் ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டு விட்டது.

இந்த சூழலில் கூலி படம் குறித்த நிறைய அப்டேட்ஸ் வந்துக்கொண்டே இருக்கின்றன. இந்த படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்சியு உறுதியாக இல்லை என்றாலும் படத்தில் பல காட்சிகளில் ஏராளமான டிவிஸ்ட்டுகளை சஸ்பென்ஸ்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இதுவரை எந்த படத்திலும் இடைவேளை நேரத்தில் இப்படி ஒரு திருப்பத்தை ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு மாபெரும் தரமான சம்பவத்தை இடைவேளை காட்சியில் செய்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

இதனால் எப்போது கூலிக்கு திரைக்கு வரும் என்று ரசிகர்கள் இப்போதே பதைபதைப்புடன் காத்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இளம் வயது ரஜினியாக பிளாஸ்பேக்கில் வருவதாக ஒரு தகவல் வைரலான நிலையில், அப்படி ஒரு சம்பவமே இல்லை. இந்த படத்தில் சிவா நடிக்கவில்லை என்று படக்குழு தெளிவுபடுத்தி விட்டது.

- Advertisement -

ஆனால் திடீரென மற்றொரு தகவல் இப்போது வேகமாக பரவி வருகிறது. அது கூலி படத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கேமியோ ரோலில் வருவதாக யாரோ கிளப்பி விட்ட தகவல் வைரலாகி வருகிறது. உண்மையில் இந்த படத்தில் கலாநிதி மாறன் எல்லாம் நடிக்கவில்லை. இது யாரோ கிளப்பிவிட்ட புரளி என்பதும் உறுதியாகி உள்ளது.

கூலி படத்தை பொருத்த வரை சிவகார்த்திகேயனும் நடிக்கவில்லை, கலாநிதி மாறனும் நடிக்கவில்லை. கூலி படம் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்றார்களோ அவர்கள் மட்டுமே நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பின்னணி குரல் எதுவும் தரவில்லை. அவரது மகள் ஸ்ருதிஹாசன் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்