- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ரெட்ரோ படம், ஓடிடி தளம் மற்றும் ரிலீஸ் தேதி...

சூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ரெட்ரோ படம், ஓடிடி தளம் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு – எதே… அந்த நாளிலா ரிலீஸ் பண்றாங்க?

- Advertisement -

கங்குவா படத்துக்கு பின் நடிகர் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நாசர் ஜெயராம் பிரகாஷ் ராஜ் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் கனிமா பாடல் படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் வைரலானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை. வழக்கமாக கார்த்திக் சுப்பராஜின் படமாக மட்டுமே அது இருந்தது என்று ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

- Advertisement -

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் ஆகிய 2 நிறுவனங்களும் ரெட்ரோ படத்தை இணைந்து தயாரித்திருந்தன. வழக்கம் போல இந்த படமும் சூர்யாவுக்கு பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தரவில்லை. ஆனால் வசூல் ரூ. 100க்கு மேல் கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் சூர்யா கலந்துக்கொண்டார். அப்போது அவர் அகரம் பவுண்டேசன் அறக்கட்டளைக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 கோடியை நன்கொடையாக வழங்கினார். மாணவ மாணவியர் கல்வி நலனுக்காக அகரம் பவுண்டேசனுக்கு சூர்யா இவ்வளவு பெருந்தொகை வழங்கியதால் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

ரெட்ரோ படத்துக்கு பிறகு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வேட்டை கருப்பு படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். அதன்பிறகு இப்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை 2 தினங்களுக்கு முன்பு எளிமையாக நடந்தது. இந்த படத்தில் மமிதா பைஜூ ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதற்கிடையே ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகிறது. வருகிற ஜூன் 5ம் தேதி ரெட்ரோ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதே நாளில் நடிகர் கமல்ஹாசன் சிம்பு நடித்த மணிரத்னம் இயக்கிய தக்லைஃப் படம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்