- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ படம், தமிழ்நாட்டில் பெரிய வசூலை வாரிக்...

உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ படம், தமிழ்நாட்டில் பெரிய வசூலை வாரிக் குவிக்கும் – அட இந்த விஷயத்தை யாரும் யோசிக்கலையே?

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக பீட்சா பேட்ட ஜிகர்தண்டா இறைவி ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இந்த முறை சூர்யாவுடன் இணைந்து காதல் உணர்வுகளை மையப்படுத்திய ஒரு படமாக ரெட்ரோ படத்தை உருவாக்கி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவுமில்லை. 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை சூர்யா நடித்த 12 படங்களில் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. தியேட்டர்களில் வெளியான அவரது 10 படங்களும் படுதோல்வியை சந்தித்தன.

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான கங்குவா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோபடம் நாளை மறுதினம் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ரெட்ரோ படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் ஜெயராம் ஜோஜூ ஜார்ஜ் நாசர் கருணாகரன் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

- Advertisement -

இதற்கிடையே ரெட்ரோ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற மே 1ம் தேதி உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 500 தியேட்டர்களில் ரெட்ரோ படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற நிலையில் பெரிய அளவில் ரெட்ரோ படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம், அரசு விடுமுறை. தொடர்ந்து வெள்ளி சனி ஞாயிறு என வாரத்தின் கடைசி நாட்களிலும் இந்த படத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வருகை இருக்கும். குடும்பங்களாக வரும் ரசிகர்ளால் வசூலும் பெரிய அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்