- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா ரெட்டோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறதா......

அடேங்கப்பா ரெட்டோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறதா… காலரை தூக்கி விடும் சூர்யா ரசிகர்கள்…

- Advertisement -

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்தார். நான்கே மாதங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. படத்திற்கு ரெட்ரோ என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெட்ரோ திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டது.

பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன் உள்பட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதில் சூர்யாவுக்கு பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது.

அங்கு சிறு குழந்தையாக இருக்கும் சூர்யா கதாபாத்திரம் ஜோஜூ ஜார்ஜ் தம்பதியால் தத்தெடுக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே முரட்டுத்தனமாக வளரும் சூர்யா, ஒரு கட்டத்தில் பூஜா ஹெக்டேவை கண்டதும் காதல் வயப்படுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.

பிறகு திருமணத்தில் இவர்கள் இணைய இருக்க ஒரு பிரச்சனை காரணமாக, சூர்யா அதிலிருந்து விலகி அடாவடியில் குதிக்கிறார். இதற்காக சிறைக்கும் செல்கிறார். பிறகு அங்கிருந்து தப்பி பூஜாவை காண்பதற்காக அந்தமானுக்கு பயணிக்கிறார் சூர்யா. அவர் இறுதியில் பூஜா உடன் இணைந்தாரா இல்லையா என்ற கதை தான் இந்த ரெட்ரோ திரைப்படம்.

படத்தில் சூர்யா மிகப் பிரமாதமாக நடித்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப் பெரும் பலத்தை சேர்த்துள்ளது. குறிப்பாக அந்த கனிமா பாடல் ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

குறிப்பாக இரண்டாம் பாதி மிகவும் சுமாராக இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். இப்படியான சூழலில் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது ரெட்ரோ திரைப்படம். கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் தலா இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் ரெட்ரோ திரைப்படம் வசூல் பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இனி விடுமுறை நாட்கள் என்பதால், படத்தின் கலெக்ஷன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்