எப்போதுமே சினிமாவில் புதிய முயற்சிகள் என்பது அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஒரு காரணமாக அமையும். அந்த வகையில் இயக்குனர்கள் பாரதிராஜா மணிரத்னம் பாலுமகேந்திரா கே பாலசந்தர் மகேந்திரன் போன்றவர்கள் வித்யாசமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பல புதுமைகளை கொண்டு வந்தனர். யதார்த்த சினிமாக்களை ரசிகர்களுக்கு தந்தனர்.
அந்த வரிசையில் ஒரு திரைப்பட நடிகராக இயக்குனராக தொழில்நுட்ப கலைஞனாக கமல்ஹாசன் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். தமிழ் சினிமாவின் பல முக்கிய மாறுதல்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் வித்திட்டவர் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல. கதையம்சத்தில் தொழில்நுட்பத்தில் கதை திரைக்கதையில் கமல் புகுத்திய வித்யாசங்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன.
அந்த வரிசையில் அவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படம் பேசும் படம். இந்த படத்தின் டைட்டில் பேசும் படம் என்றாலும் அந்த படத்தில் யாருமே பேச மாட்டார்கள். படத்தில் எந்தவிதமான வசனமும் இருக்காது. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேசும் படங்களே தோல்வியடைந்த அந்த காலகட்டத்தில் மௌன படம் தந்து வெற்றியை தக்க வைத்தவர் கமல்ஹாசன்.
சமீபத்தில் நடிகர்கள் அரவிந்தசாமி விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ் என்ற மௌன படம் வெளியானது. இந்த படத்தை பற்றி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியதாவது, இந்த படம் மௌன படம் என்பதால் பல காட்சிகளை நடிப்பிலேயே மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த பேசும் படத்தை மையமாக வைத்துதான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். பேசும் படத்தில் அனைவரும் பேசக் கூடியவர்கள். ஆனால் பேசுவதற்கான எந்த வாய்ப்பும் இருக்காது. ஆனால் இந்த படத்தில் சைகையால் கை கால்களை ஆட்டி காட்சிகளை புரிய வைத்திருக்கிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என தெரியவில்லை.
இந்த படத்தை பொருத்த வரை காலுக்கு ஏற்றபடி செருப்பு வாங்கவில்லை. செருப்பை வாங்கிவிட்டு அதற்கு ஏற்றபடி காலை வெட்டி செருப்பில் சொருகி இருக்கிறார்கள். படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை. குறிப்பாக அந்த பிக்பாக்கெட் கேரக்டர் எதற்கு என்றே தெரியவில்லை. படத்தில் வரும் கதாபாத்திரம் யாருமே பேசவில்லை. அதேபோல இந்த படத்தைப் பற்றி பேசுவதற்கும் எனக்கு எதுவும் இல்லை என்று ப்ளு சட்டை மாறன் வீடியோவில் கூறியிருக்கிறார்.





