- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென இப்படி ஒரு முடிவுக்கு ஏன் வந்தார்? காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டியின் நடவடிக்கையால்...

திடீரென இப்படி ஒரு முடிவுக்கு ஏன் வந்தார்? காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டியின் நடவடிக்கையால் குழப்பமடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

கன்னட சினிமாவில் பல படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. கடந்த 2012ம் ஆண்டில் வெளியான துக்ளக் என்ற கன்னட படம் மூலம் அவர் கன்னட சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார்.

அதில் கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. தொடர்ந்து காந்தாரா என்ற படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

- Advertisement -

இந்திய சினிமாவில் ரிஷப் ஷெட்டியை காந்தாரா படம் மிகவும் பிரபலப்படுத்தியது. அதன் பிறகு காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாகவும் வில்லனாக மலையாள நடிகர் ஜெயராமும் நடித்திருந்தனர். இந்த படம் காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக அமைந்தது.

இந்த படமும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அதன்பிறகு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நட்சத்திர ஹீரோவாக ரிஷப் ஷெட்டி இப்போது வளர்ந்துள்ளார். மேலும் சத்ரபதி சிவாஜி ஜெய் ஹனுமான் உள்ளிட்ட பான் இந்தியா படங்களில் ரிஷப் ஷெட்டி தற்போது நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல கன்னட நடிகர்களான ருக்மணி வசந்த் ராஜ் பி ஷெட்டி ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் உட்பட இதுவரை தன்னை பின்தொடர்ந்து வந்த சினிமாத்துறை சார்ந்த பலரையும் ரிஷப் ஷெட்டி அன் பாலோ செய்திருக்கிறார்.

தற்போது தன்னுடைய மனைவி பிரகதி ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ் ரிஷப் ஷெட்டி பவுண்டேஷன் ஆகிய மூன்று கணக்குகளை மட்டுமே ரிஷப் ஷெட்டி பின் தொடர்வது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரபலங்களில் சிலர் ஆரம்பத்தில் இருந்தே யாரையும் பின் தொடராமல் இருப்பார்கள். ஆனால் தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்களை தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து அவர் திடீரென நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பலத்த குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்