- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கேரக்டர்ல இவரை நடிக்க வைங்க, சிறப்பா இருக்கும், விஜய் சிபாரிசு செய்த நடிகர்...

இந்த கேரக்டர்ல இவரை நடிக்க வைங்க, சிறப்பா இருக்கும், விஜய் சிபாரிசு செய்த நடிகர் – விஜய் 68 படத்தில் தொடரும் தரமான சம்பவங்கள்

- Advertisement -

நடிகர் விஜய், இன்று தமிழ் சினிமாவில் அதிக வசூலை தரும் ஒரு பெரிய நடிகராக இருக்கிறார். லியோ படம் ரிலீஸ் ஆன ஒரே நாளில் ரூ. 148 வசூலானது. இதுவரை ரூ. 400 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

லியோ படம் குறித்து, நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், படத்தின் வசூல் நிச்சயம் பெரிய லாபம்தான் என்ற நிலையில், விஜய் லியோ படத்தை பொருத்த வரை உற்சாகமாகவே இருக்கிறார். அவரை பொருத்த வரை பீஸ்ட், வாரிசு படங்களை விட , லியோவுக்கு விஜய் ரசிகர்கள் தரப்பில் மாஸ் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபுவை பொருத்தவரை ஒரு ஜாலியான டைரக்டர். அவரது படங்களை போலவே, அவரது ஷூட்டிங் ஸ்பாட்டும் கலகலப்பாக, ஜாலியாகவே இருக்கும். அதனால், இது விஜய் நடிக்கிற ஜாலியான படமாக இருக்கும்

இந்த படத்தில் துவக்கத்தில் இருந்தே நட்சத்திர பட்டாளம் நடிப்பதை அடுத்தடுத்த அப்டேட் உறுதி செய்து வருகிறது. வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சிநேகா நடிக்கிறார். அதாவது, அப்பா விஜய்க்கு சிநேகா ஜோடியாகவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுதவிர லைலா நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், வைபவ், அஜ்மல் அமீர், யோகிபாபு, அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் ஆறு சண்டை காட்சிகளும் பயங்கர விறுவிறுப்புடன் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் எடுக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி, இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய் சம்மதிக்கவில்லை. பின், வெங்கட்பிரபு படம் என்றாலே, அவர் தம்பி இருப்பார் என்ற காரணத்துக்காக ஒத்துக்கொண்டாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் வரும் ஒரு கேரக்டரில் நடிகர் விடிவி கணேஷ், நடித்தால் நன்றாக இருக்கும் என நடிகர் விஜயே, அவருக்கு சிபாரிசு செய்திருக்கிறார். அதனால், விஜய் 68 படத்தில் விடிவி கணேஷூக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்