- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வீட்டில் பெண் எடுத்தது உண்மைதான், உதயநிதி எனக்கு சகலைப்பாடியா? -...

நானும் உதயநிதி ஸ்டாலினும் ஒரே வீட்டில் பெண் எடுத்தது உண்மைதான், உதயநிதி எனக்கு சகலைப்பாடியா? – உண்மையை போட்டுடைத்த ஆர்ஜே பாலாஜி

- Advertisement -

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குநர் கோகுல் இயக்கி உள்ளார். இந்த படம் வரும் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் ஆர்ஜே பாலாஜி, பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

விழா மேடையில் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது, எனக்கும் டைரக்டர் கோகுலுக்கும் சண்டை என இணையத்தில் தகவல்கள் வந்தது. ஆரம்பத்தில், இந்த படத்தின் கேரக்டருக்கும், என்னுடைய சுபாவத்துக்கும் ஒத்துவரவில்லை. அதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

- Advertisement -

ஏனென்றால் நான் டயலாக்குகளை நம்பி நடிப்பவன். இது நடிப்பை தாண்டிய பல விஷயங்களை கற்றுத்தரும் கேரக்டராக இருந்ததால், முதலில் புரியவில்லை. இரண்டு வாரங்களுக்கு பிறகு எனக்குள் புரிதல் ஏற்பட்டதால் ஒரு நடிகனாக என்னை இதில் வெளிப்படுத்த முடிந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர். நான் எடுத்த வீட்ல விசேஷம் படத்துக்கும் போனிகபூர்தான் தயாரிப்பாளர். அதனால் நெஞ்சுக்கு நீதி படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில், நானும் கெஸ்ட்டாக கலந்துக்கொண்டேன்.

- Advertisement -

நான் அந்த மேடையில் பேசும்போது, என்னுடைய படத்துக்கும், உதயநிதி படத்துக்கும் போனிகபூர்தான் தயாரிப்பாளர். இருவரும் ஒரே கம்பெனி படத்தில் நடித்திருக்கிறோம் என்பதை, நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள் என விளையாட்டாக பேசினேன். அடுத்து பேசிய உதயநிதியும், நானும் ஆர்ஜே பாலாஜியும் ஒரே வீட்டில் பெண் எடுத்தவர்கள்தான் என ஜாலியாக குறிப்பிட்டார்.

கடைசியில், அந்த பெண் எடுத்த விஷயத்தை மட்டும் 20 செகண்ட் வீடியோ கிளிப் எடுத்து போட்டு நானும், உதயநிதியும் ஒரே வீட்டில் அக்கா தங்கச்சியை கட்டியவர்கள் என வதந்தியை கிளப்பி விட்டுவிட்டனர். உண்மை அதுவல்ல. உதயநிதி என் சகலைப்பாடி அல்ல. நான் ஒரு வானம்பாடி, அப்படி ஓரமாக பறக்கிறவன். அதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று பேசியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

- Advertisement -

சற்று முன்