தமிழ் சினிமாவில் தற்போது ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனால் அடுத்த நாளே அதற்கு வெற்றி விழா கொண்டாடப்படுவது வாடிக்கையாகி விட்டது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், வசூலும் மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் இங்கு பலர் வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படம்.
முதலில் காமெடி நடிகராக இருந்து அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் ஆர் ஜே பாலாஜி. இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எல்கேஜி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அது எடுக்கப்பட்ட நிலையில், வசூல் ரீதியாகவும் அந்த திரைப்படம் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை எடுத்தார் ஆர் கே பாலாஜி.
தனது நண்பன் சரவணன் உடன் இணைந்து அந்த திரைப்படத்தை அவர் இயக்கினார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம், பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது. அதன்பிறகு சத்யராஜுடன் இணைந்து வீட்ல விசேஷங்க திரைப்படத்தில் நடித்தார் ஆர் ஜே பாலாஜி. இதுவும் ரசிகர்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான ரன் பேபி ரன் திரைப்படம் அவருக்கு ஓடவில்லை.
இப்படியான சூழலில் தான் ஆர்கே பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காமெடி மற்றும் எமோஷன் திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுத்தமாக ஏற்படவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர். குறிப்பாக முதல் பாதியில் சத்யராஜின் காமெடிகள் வேற லெவலில் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன.
ஆனால் இரண்டாம் பாதியை எதிர்பார்த்த அளவு இல்லாததால், சிங்கப்பூர் சலூன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. இப்படியான சூழலில் அதற்கு வெற்றி விழாவை நடத்தி இருக்கிறது படக்குழு. இதில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் இயக்குனர் கோகுலுக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் இன்னொரு படத்தையும் செய்யப் போவதாக அவர் கூறினார்.
இதே போல் நடிகர் ஆர் ஜே பாலாஜியும், தனது எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்தார். இப்படியான சொல்லில் ஓடாத திரைப்படத்திற்கு எதற்கு வெற்றி விழா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 23 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 7 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகவும், அதற்கு எதற்கு வெற்றி விழா என்றும் சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேசமயம் இந்த திரைப்படம் முதலாகவே தங்களுக்கு தெரியவில்லையே என்று சில ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.





