தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் மிக முக்கியமாக பேசப்படுபவர் கவின். சின்னத்திரையில் முதலில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்கள் கவின்னை ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்துச் சென்றது.
அங்கிருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார் கவின். சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி அவருக்கு இன்னொரு திருப்புமுனை என்று கூறலாம். அதில் ஏராளமான கவினுக்கு சேர்ந்தார்கள். இதன்பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதை கச்சிதமாக நடிகர் பயன்படுத்திக் கொண்டார்.
முதல்முறையாக லிப்ட் என்னும் திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் ஏகபோக விமர்சனத்தை பெற்றது. பிறகு உதவி இயக்குனராக முயற்சியில் சில நாட்கள் நெல்சன் உடனும் அவர் இணைந்து பணியாற்றினார். இந்த சூழலில், கவினுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தது டாடா திரைப்படம்.
வழக்கமான கதைக்களம் தான் என்றாலும், டாடா படத்தின் திரைக்கதையும், கவினின் முதிர்ச்சியான நடிப்பும் பலரையும் கவர்ந்தது. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் மூலம் அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சமீபத்தில் கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது.
இருப்பினும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. குறிப்பாக 2கே கிட்ஸ்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி தள்ளினர். அடுத்ததாக கவினுக்கு கிஸ் என்ற திரைப்படம் வெளியாகிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அதுபோக நெல்சனின் உதவி இயக்குனர் எடுத்திருக்கும் ப்ளடி பெக்கர் படத்திலும் கவின் நடித்துள்ளார்.
இதுபோக வெற்றிமாறன் தயாரிக்கும் திரைப்படத்திலும் கவின் நடித்து வருகிறார். இதற்கு மாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக செவன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும், படத்திலும் கவின் கமிட்டாகி உள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில், அலப்பறை கிளப்புகிறோம் பாடலை எழுதி புகழ்பெற்ற விஷ்ணு எடவன்தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறாராம். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வயது மூத்த பெண்ணை காதலிக்கும் இளைஞனின் கதை தான் இது என்று கூறப்படுகிறது. இது கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி என்றால் படம் ஜோராக இருக்கும் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.





