- Advertisement -
Homeபொழுதுபோக்குவனிதா விஜயகுமார் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார், அந்த படத்துக்கு டைரக்டரே நான்தான் - நடிகர்...

வனிதா விஜயகுமார் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார், அந்த படத்துக்கு டைரக்டரே நான்தான் – நடிகர் ராபர்ட் மாஸ்டர் பகிரங்க புகார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என பெயர் வாங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். ஏற்கனவே அவர் 3 திருமணங்கள் செய்து 3 கணவர்களையும் விவாகரத்து செய்து பிரிந்து, தனது மகள் ஜோவிகாவுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையே சினிமா நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வனிதா விஜயகுமார் சில ஆண்டுகள் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்தார். அதுவும் நீண்டகாலம் நீடிக்கவில்லை.

சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் டைரக்சனில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் வெளியானது. இந்த படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்து அவரே டைரக்சனும் செய்து இருந்தார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கதாநாயகனாக வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்தது குறித்து நடிகர் ராபர்ட் மாஸ்டர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, என்னுடைய அம்மாவுக்கு வனிதாவை பிடிக்காது. நான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் செய்தது என் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ஏன் இந்த படத்தில் நடித்தாய் என்று என்னை கேட்டார். என் அப்பாவும் அப்படியே கேட்டார். ஏன் இப்படி பண்றே? என்றுதான் என்னை கேட்டார்கள்.

நான் வனிதாவுடன் பழகி இருக்கிறேன். அந்த பெண் ஜோவிகாவை படிக்க வைத்திருக்கிறோம். இந்த படத்தில் நடிக்க நான் போகவில்லை என்றால் பணத்தை இழந்து விடுவார்கள். நான் போய் உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டுதான் அந்த படத்துக்குள் வந்தேன். என்னை முதலில் அந்த படத்துக்கு இயக்குனராகத்தான் பிக்ஸ் செய்தார்கள். ஆனால் வனிதா கடைசியில் மாறிவிட்டார். அவரை மாற்ற முடியாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெளிநாடு ஷூட்டிங் சென்றால் பாஸ்போர்ட்கள் தயாரிப்பாளர் கையில் தான் இருக்கும். அது மட்டும் என்னிடம் இருந்திருந்தால் பாதியில் நான் திரும்பி வந்திருப்பேன். இருந்தாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த படத்தின் ஷூட்டிங் கதைகளை அம்மாவிடம் போனில் சொன்னால், நீ நேரில் வந்து இன்னும் நிறைய கதைகள் சொல்வே பாரு என்று தான் என்னிடம் கூறுவார்.

எங்கள் பழைய பிரச்னைகளை அம்மாவிடம் சொன்ன போதெல்லாம், துஷ்டனை கண்டால் தூர விலகு, இன்னும் அனுபவிப்பே பாரு என்று திட்டுவார் என நேர்காணலில் ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் டைரக்டராக தான் ராபர்ட் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்றதும் அங்கே பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அவரை கதாநாயகனாக நீ நடி, நான்தான் இயக்குனர் என்று வனிதா விஜயகுமார் தன்னை ஏமாற்றியதாக ராபர்ட் மாஸ்டர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்