- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்தில் மீனாட்சி செளத்ரிக்கு பதிலாக கமிட் ஆன புது நாயகி - அடேங்கப்பா சிம்ரனை...

ரஜினி படத்தில் மீனாட்சி செளத்ரிக்கு பதிலாக கமிட் ஆன புது நாயகி – அடேங்கப்பா சிம்ரனை விட இவங்களுக்கு கிரஷ் அதிகமா இருக்குமே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார்.

ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தாலும் அந்த படத்தில் அவர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார். ஆனால் தர்மன் படத்தில் படம் முழுவதும் வரும்படியான அவரது கேரக்டர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் ரஜினிக்கு மகளாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் தர்மன் படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது மீனாட்சி சவுத்ரி இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனையா அல்லது சம்பளப் பிரச்சனையா அல்லது அவரது கேரக்டர் அதிக முக்கியத்துவம் இல்லாததால் விலகி விட்டாரா என்ற சரியான காரணம் தெரியவில்லை.

ஆனால் இந்த படத்தில் இருந்து மீனாட்சி சவுத்ரி விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீனாட்சி சவுத்ரி நடிக்க வேண்டிய அந்த கேரக்டரில் நடிகை ருக்மணி வசந்த் நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. கன்னட நடிகை ருக்மணி வசந்த் காந்தாரா சேப்டர் 1 படத்தில் வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். மேலும் மதராஸி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் அவர் நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகை ருக்மணி வசந்த் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக இருப்பதால் தர்மன் படத்தில் அவர் நடிப்பது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. அவரிடம் தர்மன் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அவரை கமிட் செய்த பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தர்மன் படத்தை பொருத்தவரை ரஜினிகாந்த் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் ஆக்சன் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து கூறியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால் அவரும் இந்த படத்தில் சில காட்சிகளில் கேமியோ ரோலில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது.

- Advertisement -

சற்று முன்